கோலிவுட்டின் செஞ்சுரி நாயகர்கள்... தமிழ் சினிமா ஹீரோக்களின் முதல் 100 கோடி வசூல் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட்

Published : Sep 21, 2023, 10:45 PM IST

தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் படங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பிரபலங்களின் முதல் 100 கோடி வசூல் படங்களை பற்றி பார்க்கலாம்.

PREV
113
கோலிவுட்டின் செஞ்சுரி நாயகர்கள்... தமிழ் சினிமா ஹீரோக்களின் முதல் 100 கோடி வசூல் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட்
first 100 crore collection movies tamil actors

100 கோடி வசூல் என்பது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே சாத்தியம் என்பதை தற்போதைய இளம் நடிகர்கள் தகர்த்தெறிந்துவிட்டனர். தற்போதைய காலகட்டத்தில் படத்தின் கதை ஒர்த் ஆக இருந்தால் சிறு பட்ஜெட் படங்கள் கூட 100 கோடி வசூலை அசால்டாக அள்ளிவிடுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமா நடிகர்களின் முதல் 100 கோடி வசூல் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

213
ரஜினிகாந்த்

தமிழ் சினிமா வரலாற்றில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு ரெக்கார்ட் மேக்கர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் கோலிவுட்டில் முதல் 100 கோடி வசூல் திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது சூப்பர்ஸ்டாரின் சிவாஜி திரைப்படம் தான். கடந்த 2007-ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர்ஸ்டாருக்கு மட்டுமல்ல கோலிவுட்டுக்கே முதல் 100 கோடி வசூல் திரைப்படம் ஆகும்.

313
கமல்ஹாசன்

ரஜினிக்கு அடுத்தபடியாக அவரது நண்பரும், நடிகருமான உலகநாயகன் கமல்ஹாசன் தான் ரூ.100 கோடி வசூல் சாதனையை படைத்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் இவர் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்த தசாவதாரம் தான் கமலின் முதல் ரூ.100 கோடி வசூல் படமாகும்.

413
சூர்யா

கமலுக்கு அடுத்தபடியாக 100 கோடி வசூல் சாதனையை எட்டிப்பிடித்த ஹீரோ சூர்யா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. 

513
விஜய்

நடிகர் விஜய்க்கு முதல் 100 கோடி வசூல் திரைப்படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இதன்பின்னர் அவர் நடித்த தெறி, மெர்சல், பைரவா, கத்தி, சர்க்கார், என அனைத்து படங்களும் 100 கோடிக்கு மேல் வசூலித்தது.

613
அஜித்

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அஜித், முதன்முறையாக ரூ.100 கோடி வசூலை எட்டிப்பிடித்த திரைப்படம் ஆரம்பம். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தில் அஜித்துடன் ஆர்யா, டாப்ஸி, நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

713
தனுஷ்

நடிகர் தனுஷுக்கு முதல் 100 கோடி கலெக்‌ஷன் ஆன படம் ராஞ்சனா. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் முதன்முறையாக இந்தியில் நாயகனாக அறிமுகமான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலையும் வாரிக்குவித்தது. 

813
விக்ரம்

நடிகர் விக்ரமிற்கு முதல் 100 கோடி திரைப்படம் ஐ. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தில் விக்ரம் ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நன்கு வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

913
ராகவா லாரன்ஸ்

விக்ரமுக்கு அடுத்தபடியாக ரூ.100 கோடி கலெக்‌ஷனை எட்டிப்பிடித்தவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன காஞ்சனா 2 திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.

இதையும் படியுங்கள்... விஜய் டிவி 'ஈரமான ரோஜாவே 2' சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய முக்கிய பிரபலம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

1013
கார்த்தி

2015-ம் ஆண்டுக்கு பின்னர் 4 ஆண்டுகளாக எந்த புதுமுக நடிகரும் ரூ.100 கோடி வசூல் சாதனையை எட்டிப்பிடிக்கவிலை. அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த கார்த்தியின் கைதி திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. கார்த்தியின் முதல் 100 கோடி படம் கைதி தான்.

1113
சிவகார்த்திகேயன்

கார்த்திக்கு அடுத்தபடியாக ரூ.100 கோடி வசூல் சாதனையை முதன்முறையாக எட்டிப்பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன். அவர் டாக்டர் படம் மூலம் முதன்முறையாக ரூ.100 கோடி வசூல் சாதனையை படைத்தார். அப்படம் ரிலீஸ் ஆனபோது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட போதும் அது ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்தது மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

1213
சிம்பு

தமிழ் சினிமாவில் குழந்தையில் இருந்தே நடித்து வரும் சிம்புவுக்கு முதல் ரூ.100 கோடி வசூல் படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் டைம் லூப் கான்செப்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் கடந்த 2021-ம் ஆண்டு திரைக்கு வந்தது.

1313
பிரதீப் ரங்கநாதன்

மேற்கண்ட நடிகர்களைவிட பிரதீப் ரங்கநாதன் தான் இந்த லிஸ்டில் வேகமாக இடம்பிடித்துவிட்டார். மற்ற நடிகர்கள் எல்லாம் பல்வேறு படங்களில் நடித்த பின்னரே ரூ.100 கோடி வசூலை எட்ட முடிந்தது. ஆனால் பிரதீப் ரங்கநாதனோ தான் ஹீரோவாக நடித்த முதல் படமான லவ் டுடே மூலம் ரூ.100 கோடி வசூலை குவித்து மாஸ் காட்டிவிட்டார்.

இதையும் படியுங்கள்...  "அவளுடன் நானும் இறந்துவிட்டேன்".. மகள் மீராவின் மரணம் - விஜய் ஆண்டனி வெளியிட்ட உருக்கமான பதிவு!

Read more Photos on
click me!

Recommended Stories