ரஜினி பேரனின் அட்ராசிட்டி... ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடித்த வேத்; அலேக்காக தூக்கிச் சென்ற சூப்பர்ஸ்டார்

Published : Jul 26, 2024, 11:12 AM IST

ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு முரண்டு புடித்த தன்னுடைய பேரன் வேத் கிருஷ்ணாவை காரில் அழைத்துச் சென்று டிராப் பண்ணி உள்ளார் ரஜினிகாந்த்.

PREV
14
ரஜினி பேரனின் அட்ராசிட்டி... ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடித்த வேத்; அலேக்காக தூக்கிச் சென்ற சூப்பர்ஸ்டார்
Rajinikanth, Soundarya

நடிகர் ரஜினிகாந்துக்கு தற்போது 72 வயது ஆகிறது. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் ரஜினி, கோலிவுட்டின் பிசியான நடிகராகவும் வலம் வருகிறார். அவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ளது.

24
Rajinikanth Daughter Soundarya

இதுதவிர ரஜினி கைவசம் உள்ள மற்றொரு திரைப்படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. அனிருத் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதையும் படியுங்கள்... ராயன் படத்துக்கு முன் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 5 டக்கரான ஆக்‌ஷன் படங்கள் - ஒரு பார்வை

34
rajinikanth with his Grandson Ved Krishna

இதனிடையே இன்று காலை ஒரு ருசீகர சம்பவம் நடந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவின் மூத்த மகன் வேத் கிருஷ்ணா, ஸ்கூலுக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடித்திருக்கிறார். உடனே இந்த விஷயத்தை செளந்தர்யா தன் தந்தையிடம் சொன்னதும், மகள் வீட்டுக்கு தன்னுடைய் பிஎம்டபிள்யூ காரில் சென்ற ரஜினிகாந்த், அங்கு தனது பேரனை சமாதானப்படுத்தி தன்னுடைய காரிலேயே அவரை ஸ்கூலுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

44
rajinikanth visit Ved Krishna School

பேரனை காரில் அழைத்து சென்றது மட்டுமின்றி பள்ளியில், வேத் கிருஷ்ணாவின் வகுப்பறைக்கும் சர்ப்ரைஸ் விசிட் அடித்திருக்கிறார். அங்கு ரஜினியை பார்த்ததும் அனைவரும் உற்சாகத்தில் திளைத்துப் போனார்களாம். இந்த அழகிய தருணத்தை போட்டோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள செளந்தர்யா, ஆன் ஸ்கிரீனிலும் சரி, ஆஃப் ஸ்கிரீனிலும் சரி எந்த ரோல் கொடுத்தாலும் அதை சரியாக செய்வதில் நீங்கள் வல்லவர் என குறிப்பிட்டு சிறந்த தாத்தா, சிறந்த அப்பா என்கிற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டிருக்கிறார் செளந்தர்யா. அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... உண்மையாவே பிரசாந்த் நீலின் கேஜிஎஃப் யுனிவெர்ஸில் அஜித் இணைந்துள்ளாரா? தீயாக பரவும் தகவல்..

Read more Photos on
click me!

Recommended Stories