ராயன் படத்துக்கு முன் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 5 டக்கரான ஆக்ஷன் படங்கள் - ஒரு பார்வை
தனுஷ் நடித்துள்ள ராயன் படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், இதற்கு முன் அவர் நடிப்பில் வெளிவந்த டாப் 5 படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

Raayan
தனுஷின் 50வது படமான ராயன் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வருகிறது. ராயன் படத்தில் நடித்துள்ளதோடு மட்டுமின்றி அப்படத்தை இயக்கியும் உள்ளார் நடிகர் தனுஷ். இப்படத்தில் அதிகப்படியான சண்டைக் காட்சிகள் இருக்கும் காரணத்தால் இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ராயன் படத்துக்கு முன்னர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 5 ஆக்ஷன் படங்களை பற்றி பார்க்கலாம்.
Pudhupettai
புதுப்பேட்டை
அரசியல் கதைக்களத்தில் தனுஷ் நடித்த ஆக்ஷன் படம் தான் புதுப்பேட்டை. இப்படத்தில் கொக்கி குமார் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தனுஷ். அவரை ஆக்ஷன் ஹீரோவாக வளர்த்துவிட்ட படங்களில் புதுப்பேட்டை படத்துக்கு முக்கிய பங்குண்டு. செல்வராகவன் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் ஹிட் அடித்தது.
Polladhavan
பொல்லாதவன்
தனுஷ் தனது ஆஸ்தான இயக்குனரான வெற்றிமாறன் உடன் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் பொல்லாதவன். இப்படத்தில் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் சண்டைபோட வேண்டும் என்பதற்காக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறினார் தனுஷ். அவரை சிக்ஸ் பேக்ஸ் உடன் பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்உ புரூஸ் லீ போல இருப்பதாக ஒப்பிட்டு பேசி வந்தனர்.
இதையும் படியுங்கள்... Raayan Movie Review : 50வது படத்தில் அதகளப்படுத்தினாரா தனுஷ்? ராயன் படத்தின் விமர்சனம் இதோ
vengai
வேங்கை
அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்குவதில் கைதேர்ந்த இயக்குனரான ஹரியுடன் நடிகர் தனுஷ் முதன்முறையாக கூட்டணி அமைத்த திரைப்படம் வேங்கை. இப்படத்தில் வீரம் கொண்ட வேங்கையாக ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காட்டி இருந்தார் தனுஷ். இருப்பினும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் சோபிக்கவில்லை.
Jagame Thandhiram
ஜகமே தந்திரம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த திரைப்படம் ஜகமே தந்திரம். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இப்படம் தயாராகி வந்தது. இதில் சுருளி என்கிற கதாபாத்திரத்தில் மதுரைக்கார இளைஞராக நடித்திருந்தார் தனுஷ். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
captain miller
கேப்டன் மில்லர்
தனுஷ் ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்தாக வெளிவந்த திரைப்படம் தான் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கிய இப்படத்தில் தனுஷுடன் ஷிவ ராஜ்குமார் நடித்திருந்தார். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி தன் கிராம மக்களை காக்கும் ஒரு போராளியாக மாஸ் காட்டி இருந்தார் தனுஷ்.
இதையும் படியுங்கள்... அடங்காத அசுரனாய் வரும் தனுஷ்.. "ராயன்" - மிரட்டலான புது ப்ரோமோ இதோ!