- Home
- Gallery
- உண்மையாவே பிரசாந்த் நீலின் கேஜிஎஃப் யுனிவெர்ஸில் அஜித் இணைந்துள்ளாரா? தீயாக பரவும் தகவல்..
உண்மையாவே பிரசாந்த் நீலின் கேஜிஎஃப் யுனிவெர்ஸில் அஜித் இணைந்துள்ளாரா? தீயாக பரவும் தகவல்..
கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாக உள்ள 2 புதிய படங்களில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை.. இந்த பதிவில் பார்க்கலாம்.

Ajith Kumar
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் அஜித். கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தில் அஜித் நடித்திருந்தார். இந்த படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
Actor Ajith Kumar
இதை தொடர்ந்து அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் அஜித் நடித்து வருகிறார். இதில் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Ajith Kumar
அதே போல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோ நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Ajith Kumar Prashant Neel
இந்த நிலையில் கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாக உள்ள 2 புதிய படங்களில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் கேஜிஎஃப் யுனிவெர்ஸில் உருவாகும் கேஜிஎஃப் 3 படத்திலும் அஜித் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. படத்தின் கதை குறித்து பிரசாந்த் நீலிடம் விவாதித்ததாகவும், கதை பிடித்து போகவே அஜித்தும் அதற்கு ஓ.கே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Ajith kumara joined in kgf universe
கேஜிஎஃப் 1,2, சலார் படங்களை தயாரித்த ஹோம்பேல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது. இதனால் கேஜிஎஃப் 3 படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Ajith Kumar
ஆனால் ஹேம்பேல் நிறுவனம் இந்த செய்தியை மறுத்துள்ளனர். மேலும் இது வெறும் வதந்தி என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் இந்த தகவல் போலி செய்தி என்பது தெளிவாகி உள்ளது.
kgf
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் 1, 2 படங்களுக்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கேஜிஎஃப் 2 படம் ரூ.1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்தியாவின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக உள்ளது. இதை தொடர்ந்து சூழலில் கேஜிஎஃப் 3 படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
prashant neel next project
இதனிடையே, பிரசாந்த் நீல் தற்போது ஜூனியர் என்.டி.ஆரின் 31 வது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸின் சலார் 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்கவும் பிரசாந்த் நீல் முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.