ரஜினி ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்த படம் எது தெரியுமா? இப்படி ஒரு காரணம் இருக்கா?

First Published Mar 19, 2024, 3:36 PM IST

திரைக்கலைஞர்களுக்கு உதவுவதற்காக ரஜினி ஒரு படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார். அது எந்த படம் தெரியுமா?

Rajinikanth

பழம்பெரும் இயக்குனர் எஸ்பி முத்துராமன், ரஜினிகாந்த் கூட்டணியில் பல படங்கள் வெளியாகி உள்ளன. எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் மட்டும் மொத்தம் 25 படங்களில் நடித்துள்ளார் ரஜினி. அதாவது முத்துராமன் இயக்கத்தில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் ரஜினி நடித்துள்ளார்.

1990களில் எஸ்.பி முத்துராமன் தொடர்ச்சியாக  படங்கள் இயக்கியதால், அவரின் குழுவில் இருந்த உறுப்பினர்கள் பிற யூனிட்டில் வேலை செய்யாமல் இருந்தனர்.. அப்படி எஸ்.பி முத்துராமன் தலைமையிலான குழுவில் ஒளிப்பதிவாளர் விநாயகம், எடிட்டர் விட்டல், மேக்கப் கலைஞர் முஸ்தபா உள்ளிட்ட 14 முக்கிய உறுப்பினர்கள் 

rajinikanth

எனினும் தனது படங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பது குறித்து எஸ்.பி முத்துராமன் கவலைப்பட்டார். எனவே, இந்த பிரச்சனையை ரஜினிகாந்திடம் பேசி தனக்காக ஒரு படத்தில் நடிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அவர் வேண்டுகோளுக்கு இணங்க உருவான படம் தான் பாண்டியன்.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் குறைந்த கால்ஷீட்டில் எடுக்கப்பட்ட படம் தான் பாண்டியன். இந்த படத்தின் டைட்டிலில் கூட, நட்பின் அடிப்படையில் ரஜினி சம்பளம் வாங்காமல் நடித்ததை படக்குழுவினர் குறிப்பிட்டிருந்தனர். இந்த படத்தை எஸ்.பி முத்துராமன் தான் தயாரித்திருந்தார். மிகவும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் இந்த படத்தில் வரும் சண்டை காட்சியில் கூட எந்த பொருளையும் உடைக்காமல் அந்த காட்சியை எடுத்திருப்பார்.

அதாவது இந்த படத்தில் வரும் சண்டைக்காட்சியில் ரஜினியிடம் அடிவாங்கும் நபர் கண்ணாடி மீது மோதப் போக, ரஜினி அவரை தடுத்து, “நான் இங்கு வேலை கேட்டு வந்திருக்கேன். நீங்க கண்ணாடி, சேர் எல்லாத்தையும் உடைத்தால் எனக்கு வேலை கிடைக்காது. எனவே, நான் அடிப்பேன், ஆனால் நீங்கள் எதையும் உடைக்காமல் விழ வேண்டும்” என்று ரஜினி கூறுவார்.

இதை தொடர்ந்து பாண்டியன் மூலம் கிடைத்த லாபம், எஸ்.பி.முத்துராமன் உட்பட பிரிவில் உள்ள 14 பேரும் பங்கிட்டு கொண்டனர். அந்த வகையில் பாண்டியன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வி.ஏ துரைக்கும் படத்தின் லாபத்தில் பங்கு தரப்பட்டது. அதை வைத்து தான் ஒரு வீட்டை வாங்கியதாக வி.ஏ துறை பின்னாளில் கூறியிருந்தார்.

click me!