அனிருத் தற்போது பீக் ஃபார்மில் உள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய், அஜித், கமல் ஆகியோரின் படங்களை கைவசம் வைத்துள்ளார் அனி. இதுதவிர டோலிவுட், பாலிவுட்டில் இருந்தும் அனிருத்துக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனால் நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல் சுழன்று வருகிறார் அனிருத். அவர் இசையமைப்பில் தற்போது அஜித்தின் விடாமுயற்சி, விஜய்யின் லியோ, ரஜினியின் தலைவர் 170 மற்றும் 171, கமலின் இந்தியன் 2 ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D