ப்ரீத்தா எப்போதுமே ட்ரடிஷனை அதிகம் விரும்புவர். மாடலாக புடவை கட்டுவதை விட, பட்டு புடவை, தலையில் மல்லி பூ, காதில் பெரிய கம்மல், நெற்றியில் குங்குமம், கை நிறைய வளையல் என பார்ப்பதற்கு எப்போதுமே கண்ணுக்கு நிறைவாக இருக்க கூடியவர். அதே போல் ஒவ்வொரு வருடமும், தவறாமல் வரலட்சுமி நோம்பை கடைபிடித்து வருகிறார். இதுவரை நான்கு வருடங்கள் இவர் வரலட்சுமி தேவியுடன் பகிர்த்துள்ள புகைப்படங்களின் தொகுப்புகள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.