சித்தார்த், நாக சைதன்யாலாம் நெக்ஸ்ட் தான்... அவர்களுக்கு முன்பே சமந்தா காதலித்த அந்த நபர் பற்றி தெரியுமா?

Published : Jul 20, 2024, 08:03 AM IST

நாக சைதன்யாவை காதலிக்கும் முன்னரே நடிகை சமந்தா மற்றொருவரை காதலித்துள்ளார். அவரின் முதல் காதல் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
சித்தார்த், நாக சைதன்யாலாம் நெக்ஸ்ட் தான்... அவர்களுக்கு முன்பே சமந்தா காதலித்த அந்த நபர் பற்றி தெரியுமா?
Samantha

தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் கவுதம் மேனன் இயக்கிய மாஸ்டர் பீஸ் படமான விண்ணைத்தாண்டி வருவாயா மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தின் தமிழ் வெர்ஷனில் சின்ன ரோலில் நடித்திருந்த சமந்தா, அதன் தெலுங்கு வெர்ஷனில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ஜெஸ்ஸி என்கிற லீடு ஹீரோயின் ரோலில் நடித்திருந்தார் சமந்தா. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

25
Samantha Ruth Prabhu

பின்னர் கோலிவுட்டில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்த சமந்தா, திரிஷா, நயன்தாராவுக்கு போட்டியான நடிகையாகவும் வலம் வந்தார். இப்படி செம்ம பார்மில் இருந்த சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்கிற நோய் பாதிப்பு அவரது வாழ்க்கையை அப்படியே புரட்டிப்போட்டது. அந்த நோய் பாதிப்பில் இருந்து மீள கிட்டத்தட்ட ஓராண்டுகள் ஆன நிலையில், அதன்பின்னர் படங்களிலும் நடிப்பதை நிறுத்திவிட்டார் சமந்தா. தற்போது அதிலிருந்து முழுவதுமாக மீண்டு மீண்டும் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்... கோலிவுட்.. ஆகஸ்ட் 15.. நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் இரு கிளாசிக் ஹீரோஸ் - வெல்லப்போவது யார்?

35
Samantha Love

சினிமா நடிகைகள் என்றாலே அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களுக்கும் பஞ்சமிருக்காது. அப்படி சமந்தாவும் ஏராளமான காதல் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். அந்த வகையில் நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து அவரை திருமணமும் செய்துகொண்டு, பின்னர் திருமணமான நான்கு ஆண்டுகளில் அவரை விவாகரத்தும் செய்து பிரிந்துவிட்டார். நாக சைதன்யாவுடன் காதல் மலரும் முன்னரே சமந்தா நடிகர் சித்தார்த்தை துரத்தி துரத்தி காதலித்துள்ளார். அவர்களது காதல் திருமணம் வரை சென்று நின்றுபோனது.

45
Samantha School Love

இவையெல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் பலரும் அறிந்திடாத சமந்தாவின் முதல் காதல் பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா பல்லாவரத்தில் தான் தன் பள்ளிப்படிப்பை முடித்தார். அப்போது ஸ்கூலுக்கு செல்ல இரண்டு பஸ்களில் மாறி செல்ல வேண்டுமாம். அந்த சமயத்தில் சமந்தாவுக்காக தினமும் ஒரு பள்ளி மாணவன் பஸ் ஸ்டாப்பில் காத்திருப்பானாம். சமந்தாவை பின் தொடர்ந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

55
Samantha First Love

இருந்தாலும் அருகில் வந்ததில்லையாம். இரு ஆண்டுகளாக பின் தொடர்ந்தவனிடம் சென்று ஒரு நாள் நேராகவே கேட்டிருக்கிறார் சமந்தா, ஏன் என்னை பாலோ செய்கிறாய் என்று... அதற்கு அவன் நான் ஏன் உன்னை பின் தொடரப்போகிறேன் என்று பதிலுக்கு கேட்க சமந்தா ஷாக் ஆகிவிட்டாராம். இது காதலா என்று தெரியவில்லை என சமந்தா கூறி இருக்கிறார். அவர் சொன்னதைப் பார்த்தால் அந்த நபர் காதலை சொல்லுவார் என சமந்தா எதிர்பார்த்திருக்கிறார் போல தெரிகிறது. 

இதையும் படியுங்கள்... ரூ.5000 கோடி வசூல்.. 2024-ல் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த இந்திய படங்கள்.. ஆட்டத்தையே மாற்றிய கல்கி 2898 ஏடி!

Read more Photos on
click me!

Recommended Stories