சுடரை சிக்க வைக்க மனோகரி விரித்த வலையில் சிக்கிய அப்பாவி! எழில் முடிவு என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

Published : Jul 15, 2024, 06:59 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், நினைத்தேன் வந்தாய் சீரியலில்... மனோகரி பணத்தை கேட்டு செல்வி பணத்தை திருடி, சுடரை சிக்க வைக்க நினைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.  

PREV
15
சுடரை சிக்க வைக்க மனோகரி விரித்த வலையில் சிக்கிய அப்பாவி! எழில் முடிவு என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

கனகவல்லிக்கு சர்பிரைஸ் கொடுக்க, குழந்தைகள் அவருக்காக கேக் செய்து... பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், குழந்தைகள் செய்த கேக்கை சாப்பிட்ட எழில், அவர்களை கட்டி பிடித்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்துகிறார். 

25

ஒருவழியாக பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து, கனகவல்லி ரூமுக்கு வந்த போது தான், அங்கிருந்த பணம் காணாமல் போன விஷயம் அவருக்கு தெரியவருகிறது. பின்னர் அனைவரிடமும் இதுகுறித்து கூறிவிட்டு, ராமையாடிவிடம் சொல்லி, வீடு முழுவதும் அணைத்து இடங்களையும் தேட சொல்கிறார்.

இசக்கியை பார்க்க நினைக்கும் சூடாமணி! வைகுண்டம் முடிவால் நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!

35

அதாவது பணத்தை மனோகரின் பேச்சை கேட்டு திருடியது, செல்வி தான், எப்படியும் சுடருக்கு திருடி என பட்டம் கட்ட வேண்டும் என அவர் நினைக்க, சுடர்  போனில் பேசியபடி இங்கும் அங்கும் நடந்து கொண்டிருப்பதால் அவரின் அறையில் வைக்க முடியாமல் போகிறது.

45

எடுத்த இடத்திலேயே பணத்தை வைக்க செல்வி முயற்சி செய்ய. கனகவல்லி தண்ணீர் குடிக்க வந்துவிட அப்போதும் வைக்க முடியாமல் போகிறது. இதனால் செல்வி பணத்தை வெளியில் தூங்கிக் கொண்டிருந்த ராமையாவின் பக்கத்தில் இருந்த பைக்குள் மறைத்து வைத்து விடுகிறாள். 

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்திகேயன்.. கிராமத்து கண்மணியாய் ஆர்த்தி! ரசிக்க வைக்கும் Throw Back வெட்டிங் போட்டோ

55

பணம் காணாமல் போன விஷயம் தெரிய வந்ததும், மனோகரி திடீர் என முந்திக்கொண்டு, வீட்ல எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தாச்சு.. ஆனா இன்னும் ராமையாவோட பையில் தேடி பார்க்கலையே? என்று சொல்ல அனைவரும் அதைக் கேட்டு ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories