MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இசக்கியை பார்க்க நினைக்கும் சூடாமணி! வைகுண்டம் முடிவால் நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!

இசக்கியை பார்க்க நினைக்கும் சூடாமணி! வைகுண்டம் முடிவால் நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலின், நேற்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த முதல் நாளே சண்முகமும் - பரணியும் கணவன் மனைவியாக வாழவில்லை என்பதை சூடாமணி கண்டுபிடித்த நிலையில், இன்று நடக்க போவது என்ன? என்பதை பார்க்கலாம். 

2 Min read
Author : manimegalai a
Published : Jul 15 2024, 06:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சூடாமணி பரோலில் வெளியே வந்து பிள்ளைகளுடன் இருக்கும் நாட்களிலாவது அவர்களுக்கு சமைத்து போட்டு, அன்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என எண்ணி, எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்வதோடு, அனைவருக்கும் தன்னுடைய கைகளாலேயே சமைத்து பரிமாறுகிறார்.

26

இதை சாப்பிட்ட கனி, இவங்க செஞ்சது... அப்படியே இசக்கி அக்கா சமைத்தது போலவே இருக்கு என சொல்ல, அதற்க்கு வைகுண்டம் இசக்கி மாதிரி இவங்க சமைக்கல, இவங்கள மாதிரி தான் இசக்கி சமைப்பாள் என கூறியதும், ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்த்து கொள்வதால், கொஞ்சம் பரபரப்பு ஏற்படுகிறது.

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்திகேயன்.. கிராமத்து கண்மணியாய் ஆர்த்தி! ரசிக்க வைக்கும் Throw Back வெட்டிங் போட்டோ

36

சுதாரித்துக்கொண்ட ஷண்முகம் சூடாமணி தான் அம்மா என்கிற உண்மை தெரிந்துவிடுமோ என பயந்து சமாளிக்கிறார். பின்னர் தன்னுடைய மனைவிக்கு பிடித்த நெத்திலி மீன் குழம்பை யார்க்கும் தெரியாமல் கடையில் இருந்து வாங்கி வரும் வைகுண்டம் அதை அவருக்கு ஊட்டிவிட... இதை வெட்டுக்கிளி பார்த்து விடுகிறான். 

46

காலம் போன போக்குல இந்த ஆளுக்கு இதெல்லாம் தேவையா என்று திட்டிவிட்டு, பரணி சண்முகத்திடம் விசயத்தை சொல்ல கிளம்பி செல்கிறான். பின்னர் சூடாமணி இசக்கியை பார்க்க வேண்டும் என கூற அதற்க்கு வைகுண்டம் ஏற்பாடு செய்வதாக சொல்லி, சவுந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி வருகிறார். இசக்கிக்கு பூ எடுக்கணும் என்று சொல்ல எதிர்பாராத விதமாக முத்துப்பாண்டி மற்றும் சௌந்தரபாண்டி சம்மதம் சொல்ல வைகுண்டம் சந்தோஷமாகிறார். 

என் காதல் அவர்... ஆனால் உயிர் இது தான்! திருமணத்திற்கு பின் நடிப்புக்கு முழுக்கா? வரலட்சுமி கூறிய பதில்!

56

அதன் பின்னர் வெட்டுக்கிளி, பரணி மற்றும் சண்முகத்திடம் வந்து வைகுண்டம் சூடாமணிக்கு சாப்பாடு ஊட்டிய விஷயத்தைப் பற்றி சொல்ல இவர்கள் வெட்டுக்கிளிக்கு உண்மை தெரிந்து விட்டதோ என்று பதறுகின்றனர். பிறகு காலம் போன வயசுல அந்த ஆளுக்கு இதெல்லாம் தேவையா? என்று கேட்க சண்முகமும், பரணியும் அது வைகுண்டத்தோடு செட்டப் என்று சொல்லி சமாளிக்கிறார்கள். 

66
Anna Serial

Anna Serial

பிறகு பாக்கியம் பரணிக்கு போன் போட்டு இசக்கிக்கு பூ எடுக்கும் விஷயத்தை சொல்ல, சண்முகம் அப்பா எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காரு என்று டென்ஷன் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது பற்றிய பரபரப்பான தருணங்கள் பற்றி தெரிந்து கொள்ள அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

Panthere Brooch Cost: ஆனந்த் அம்பானி தன்னுடைய ஷர்வானியில் அணிந்திருந்த.. சிறுத்தை ப்ரூசின் விலை இத்தனை கோடியா?
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved