Nayanthara New Year: காத்து வாக்கில் குழந்தைகளை கொஞ்சியபடி... விக்கியை முத்தமிட்டு நியூ இயர் கொண்டாடிய நயன்!

Published : Jan 01, 2024, 10:02 PM IST

நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும், குழந்தைகளுடன் கொண்டாடிய நியூ இயர், புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.  

PREV
15
Nayanthara New Year: காத்து வாக்கில் குழந்தைகளை கொஞ்சியபடி... விக்கியை முத்தமிட்டு நியூ இயர் கொண்டாடிய நயன்!

தமிழ் சினிமாவில், கடந்த 20 ஆண்டுகளாக... ஹீரோயினாக மட்டுமே நடித்து, கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என பெயரெடுத்துள்ள நடிகை நயன்தாரா. நடிகையாக மட்டும் இன்றி, ஒரு பெண் தொழிலதிபராகவும் தன்னை நிலை நிறுத்தி கொண்டு.. செம்ம பிஸியான பெண்மணியாக வலம் வருகிறார். மேலும் எந்த ஒரு கொண்டாட்டம் என்றாலும் அதனை தன்னுடைய குடும்பத்துடன் செலபிரேட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

25

கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி, தன்னுடைய இரட்டை குழந்தைகள் மற்றும் கணவர் விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை குதூகலமாக கொண்டாடினார் நயன்தாரா. இதில் நயன்தாராவின் அம்மாவும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு... நடிகருடன் திருமணம் ! கல்யாண தேதி குறித்து வெளியான தகவல்.. குவியும் வாழ்த்து!

35

இதை தொடர்ந்து நயன்தாரா இன்று... செம்ம கூலாக குழந்தைகளுடன் கொஞ்சியபடியும், கணவர் விக்னேஷ் சிவனுக்கு முத்த மழையை பொழிந்தபடியும், இந்த ஆண்டு நியூ இயரை மிகவும் எளிமையாக... தன்னுடைய வீட்டிலியேயே கொண்டாடியுள்ளார். இந்த கியூட் போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகள் குவிந்து வருகிறது.

45

நயன்தாரா கடந்த 2021-ஆம் ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் ஆன 4 மாதத்தில்... வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்த குழந்தைகளுக்கு உயிர் - உலகம் என விக்கி மற்றும் நயன் பெயர் வைத்துள்ளனர்.

'வாரிசு' முதல் 'சந்திரமுகி 2' வரை.. எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி.. ரசிகர்களை ஏமாற்றிய 5 படங்கள்!

55

தன்னுடைய குழந்தைகளுக்கு சமீபத்தில் தான் நயன், மிகவும் கிராண்டாக முதல் பிறந்தநாளை கொண்டாடினார். குழந்தைக்கு தாய் ஆன பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக கலக்கி வருகிறார் நயன்தாரா. அதே போல் விக்கி தற்போது, இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து LIC என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories