
திருச்சி மாவட்டத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதமான நடிகர் தான் நெப்போலியன். இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறினார். நெப்போலியன் வாட்ட சாட்டமாக இருப்பதால், மாவீரன் நெப்போலியனை மனதில் வைத்து கொண்டு இவரின் குமரேசன் என்கிற பெயரை மாற்றி, நெப்போலியன் என பெயர் வைத்தார் பாரதிராஜா.
இந்த பெயரை நெப்போலியனுக்கு சூட்டிய போது, அவர் தன்னை தன்னுடைய நண்பர்கள் இது பிரபல மதுபானத்தின் பெயர் என கூறி கிண்டல் செய்வார்கள் என ஒருவித தயக்கம் மனதில் இருந்தாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்துவிட்டாராம். பின்னர் இவர் நினைத்தது போலவே, "நெப்போலியன் நண்பர்கள் உனக்கு இயக்குனர் புதிதாக பெயர் வைத்துள்ளாராமே அது என்ன? என்று கேட்டபோது... நெப்போலியன் தன்னுடைய பெயரை சொன்னதும், ஏன் ஓல்ட் மங்க், ராயல் பிராண்டி, அப்படின்னு பெயர் வச்சிக்க கூடாது என கிண்டல் செய்தார்களாம்.
“விஜய்யின் அப்பா இதுக்காக தான் என் பெயரை மாற்றினார்..” முதன்முறையாக ரகசியத்தை உடைத்த விஜய் ஆண்டனி..
இதற்கு நெப்போலியன் தன்னுடைய நண்பர்களிடம், சாதாரணமாக ரமேஷ், சுரேஷ், என பெயர் வைத்துக் கொண்டால் அவர்கள் தமிழ் ஹீரோக்கள், அமிதாபச்சன், ஷாருக்கான், என பெயர் வைத்தால் அவர்கள் ஹிந்தி பட ஹீரோக்கள். ஆனால் எனது பெயர் உலகம் முழுவதும் தெரியும். அதனால் ஹாலிவுட் படங்களில் நான் நடித்தால் கூட எனக்கு பெயர் மாற்ற வேண்டாம் என கூறி உள்ளார்.
தமிழில் மிகவும் சவாலான, சண்டை காட்சிகள் நிறைந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து பிரபலமானார் நெப்போலியன். குறிப்பாக இவர் நடித்த சீவலப்பேரி பாண்டி, கிழக்கு சீமையிலே, எஜமான் போன்ற படங்கள் நெப்போலியனுக்கு மிகப்பெரிய வரவேற்பையும், பெயரையும் பெற்று தந்தது. சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும்போதே... அரசியலிலும் கவனம் செலுத்த துவங்கிய நெப்போலியன் கலைஞர் கருணாநிதியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திமுக கட்சியில் சேர்ந்தார். இவர் திமுகவில் சேர இன்னொரு மிக முக்கிய காரணம், இவருடைய மாமா நேரு திமுகவை சேர்ந்தவர் என்பதுதான்.
எனக்கு இனி பிள்ளையே இல்ல... கோபியை ஒரேயடியாக தலை முழுவிய ஈஸ்வரி! 'பாக்கிய லட்சுமி' சீரியல் அப்டேட்!
திமுக கட்சியில் இணைந்த பின்னர்... கடந்த 2001 ஆம் ஆண்டு, வில்லிவாக்கம் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நெப்போலியன் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மக்களவை தொகுதியில் பெரம்பூரில் போட்டியிட்டார். அங்கும் வெற்றி வாகை சூடிய நெப்போலியன், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறையின் இணை அமைச்சராக பதவி வகித்தார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மற்றொரு மகனான முக அழகிரியின் தீவிர விசுவாசியாக இருந்த நெப்போலியன், அவர் திமுகவை விட்டு 2014 ஆம் ஆண்டு வெளியேறிய போது... தன்னையும் திமுக கட்சியில் இருந்து விடுவித்துக்கொண்டார்.
பின்னர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட நெப்போலியன், தன்னுடைய குடும்பத்திற்காக திரைப்படங்கள் மற்றும் அரசியல் பணிகளில் இருந்து முடிந்தவரை விலகியே உள்ளார். மேலும் அமெரிக்காவில் தற்போது தன்னுடைய மகன்கள் தனுஷ் மற்றும் குணால் மனைவி ஜெயசுதா உடன் வசித்து வரும் நெப்போலியன், அங்கு ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற ஐடி நிறுவனம் ஒன்றையும், சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இவரின் மூத்த மகன் தனுஷின் திருமண வேலைகள் ஒருபுறம் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் பிரபல சினிமா நடிகரும், பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் எடுத்த பேட்டியில் கலந்து கொண்ட நெப்போலியன், தன்னுடைய மனைவியை பெண் பார்க்க செல்லும் போது தன்னை வேண்டாம் என அவர் நிராகரித்ததாக கூறி அதன் காரணத்தையும் முதல்முறையாக கூறியுள்ளார்.
நெப்போலியன் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த போது தான், இவருக்கும் ஜெயசுதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. பெற்றோர் இவர்கள் இருவரின் ஜாதகத்தை பார்த்தபோது ஒன்பது பொருத்தம் பொருந்தி இருந்ததாம். இதையடுத்து ஜெயசுதா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, நெப்போலியன் ஜெயசுதாவை பெண் பார்க்க அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஜெயசுதா யார் மாப்பிள்ளை என கேட்க, உறவினர்கள் நெப்போலியனை காட்டி இவர்தான் உன்னை பெண் பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளை என கூறியுள்ளனர்.
பின்னர் ஜெயசுதா எனக்கு அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என கூறியுள்ளார். எல்லோரும் பதறி போய் என்ன காரணம்? என கேட்க... ஜெயசுதா 'எஜமான்' படத்தில் வயிற்றில் உள்ள கருவையே கலைக்கும் அளவுக்கு கொடுமைக்காரர் இவர், இவருடன் எப்படி குடும்பம் நடத்துவது என கேட்டுள்ளார். அதற்கு பின்னர் அதெல்லாம் சினிமா, நிஜத்தில் இவர் மிகவும் நல்லவர். விசாரிக்காமல் பெண் கொடுப்பேனா என ஜெயசுதாவின் அப்பா அவரை சமாதானம் செய்து, திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாராம். இந்த சுவாரஸ்ய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.