Mari Selvaraj : என்னுடையதும் நாடகக் காதல் தான்... மனைவி திவ்யா பற்றி முதன்முறையாக மனம் திறந்த மாரி செல்வராஜ்

Published : Jul 20, 2024, 09:00 AM IST

வாழை பட விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், தன்னுடையதும் நாடகக் காதல் தான் என பேசி இருப்பது சமூக வலைதளங்களில் புயலை கிளப்பி உள்ளது.

PREV
15
Mari Selvaraj : என்னுடையதும் நாடகக் காதல் தான்... மனைவி திவ்யா பற்றி முதன்முறையாக மனம் திறந்த மாரி செல்வராஜ்
mari selvaraj

இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்து இருப்பவர் மாரி செல்வராஜ். அவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய மூன்று படங்களும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படி ஹாட்ரிக் ஹிட் கொடுத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் தான் வாழை. இப்படத்தை அவரது மனைவி திவ்யா தான் தயாரித்து உள்ளார்.

25
Vaazhai Movie

வாழை படத்தில் திவ்யா துரைசாமி, கலையரசன் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது. இதில் பா.இரஞ்சித், வினோத்ராஜ் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், தன்னுடைய நாடகக் காதல் பற்றி பேசினார்.

இதையும் படியுங்கள்... சித்தார்த், நாக சைதன்யாலாம் நெக்ஸ்ட் தான்... அவர்களுக்கு முன்பே சமந்தா காதலித்த அந்த நபர் பற்றி தெரியுமா?

35
Mari Selvaraj Wife

அவர் பேசியதாவது : “என் காதல் மனைவி திவ்யாவை நான் முதன்முதலில் கூட்டிச் சென்ற படம் இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. அப்படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் ராம் சாரிடம் இருந்து போன் வந்தது. ஒரு புத்தகத்தை வாங்கி வர சொல்லி அதில் உள்ளதை படித்து சொல்லுமாறு கேட்டார். நானும் பாதியில் எழுந்து வந்து அந்த புத்தகத்தை வாங்கி அது பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குள் படமே முடிந்துவிட்டது. அப்போது நானும் ராம் சாரும் சினிமாவை பற்றி பேசுவதை கேட்கும் போது அவங்களுக்கு ஷாக்கிங்கா இருந்துச்சு.

45
Mari Selvaraj Family

ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும், என்கிட்ட போன் பண்ணி டிக்கெட் வாங்கிதருமாறு கேட்பார். நான் தங்கமீன்கள் மாதிரியான படத்தில் ஒர்க் பண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அவரோ எந்திரன் மாதிரியான படத்துக்கு டிக்கெட் கேட்பார். நானும் அவருக்காக அடிச்சு புடிச்சு வாங்கி கொடுத்திருவேன். நான் திவ்யாவை திருமணம் செய்ததற்கான ஒரே காரணம், அவரும் அவரது குடும்பத்தினரும் கலையை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

55
Mari Selvaraj wife Divya

இன்னைக்கு நான் எமோஷனல் ஆனதற்கு ரீசன் என்னவென்றால் நாடகக் காதல் வழி நாம ஏதோ செஞ்சிருக்கோம்னு தோணுச்சு. நாடகக் காதல்னா உங்களுக்கு புரிந்திருக்கும், சாதி மறுப்பு திருமணம் தான் நாடகக் காதல். அந்த நாடகக் காதல் வழி நாம் ஏதோ பண்ணிருக்கோம்னு நினைக்கும்போது சந்தோஷமாக இருந்தது. என்னுடைய வாழ்க்கையில் இது முக்கியமான நாள், ஏன்னா என்னுடைய காதலி, என்னுடைய திவ்யாவை மேடையில் வைத்து, அவருடைய பெயரில் இந்த படம் வருவது ரொம்ப எமோஷனலா இருக்கு” என நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார் மாரி செல்வராஜ்.

இதையும் படியுங்கள்... Genelia : "அவளே என் காதல்" ஆனந்த கண்ணீரில் மிதந்த ஜெனிலியா - வெளியான அவருடைய Unseen திருமண பிக்ஸ்!

click me!

Recommended Stories