- Home
- Gallery
- Genelia : "அவளே என் காதல்" ஆனந்த கண்ணீரில் மிதந்த ஜெனிலியா - வெளியான அவருடைய Unseen திருமண பிக்ஸ்!
Genelia : "அவளே என் காதல்" ஆனந்த கண்ணீரில் மிதந்த ஜெனிலியா - வெளியான அவருடைய Unseen திருமண பிக்ஸ்!
Actress Genelia Unseen Marriage Pics : தமிழில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ள நடிகை தான் ஜெனிலியா.

Ritesh marriage
மும்பையில் பிறந்து, கடந்த 2003ம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய ஜெனிலியா, தமிழில் அதே 2003ம் ஆண்டு வெளியான "பாய்ஸ்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
Raayan Lyrical Song: மெலடி மழையில் நனைய வைத்த ஏ.ஆர்.ரகுமானின் 'ஓ ராயா' லிரிக்கல் பாடல்!
Ritesh
தமிழ் மொழியில் இவர் நடித்த "சச்சின்", "சென்னை காதல்", "சந்தோஷ் சுப்பிரமணியம்", "உத்தம புத்திரன்" மற்றும் "வேலாயுதம்" ஆகிய திரைப்படங்கள் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.
Genelia Marriage
வெறும் 6 தமிழ் திரைப்படங்கள் தான் இவர் நடித்திருக்கிறார் என்றபொழுதும், தமிழ் ரசிகர்களுக்கு இவர் மேல் ஒரு தனி பாசம் எப்போதும் உண்டு. 2003ம் ஆண்டு முதல் கடந்த 21 ஆண்டுகளாக தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஜெனிலியா.
Ritesh Deshmukh
இப்போது 36 வயது நிரம்பிய ஜெனிலியா டிஸோசா, கடந்த 2012ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
Ritesh Deshmukh Marriage
திருமணத்திற்கு பிறகு இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஜெனிலியா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர், அதே நேரம் ரித்தேஷ் தேஷ்முக் ஹிந்து மதத்தை சேர்ந்தவர் என்பதனால், இருவருடைய மத சடங்குகள் படி, இரு முறை இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது.
Actress Genelia
பொதுவெளியில் தனது கணவரோடு செல்லும்போது, இந்த ஜோடி ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளதால், ரசிகர்கள் பலருக்கும் பிடித்தமான ஒரு ஜோடி இவர்கள் என்றே கூறலாம்.
Actress Genelia Marriage
நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தன் காதல் மனைவி ஜெனிலியாவை திருமணம் செய்து கொண்ட அந்த அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் அதற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.
அட.. ஒரே பாட்டில் ஃபேமஸான இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? இப்பவும் அதே இளமையோடு இருக்காங்களே..