லேடி சூப்பர் ஸ்டாரின் மண்ணாங்கட்டி.. கொடைக்கானலில் துவங்கிய படப்பிடிப்பு - இயக்குனர் யார் தெரியுமா?
Ansgar R |
Published : Oct 12, 2023, 06:27 PM IST
தமிழ் திரை உலகின் முன்னணி நாயகி ஆக வலம் வரும் நயன்தாரா மண்ணாங்கட்டி Since 1960 என்கின்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகியாக களமிறங்கி நடித்து வந்த நடிகை தான் நயன்தாரா. துவக்கத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்த நிலையில் அவர் மாபெரும் புகழ் பெற்றார் என்றால் அது சற்றும் மிகையல்ல.
அதனை தொடர்ந்து தளபதி விஜய், தல அஜித், சூர்யா, கார்த்திக், தனுஷ் மற்றும் விஷால் என்று பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ச்சியாக நடித்து இன்று, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார். அண்மையில் பாலிவுட் உலகில் தனது தடத்தை பதித்த நயன்தாரா தற்பொழுது தனது அடுத்த பட பணிகளை துவங்கி உள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் மூலம் பிரபலமான Dude விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி Since 1960 என்கின்ற திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் இன்று கொடைக்கானலில் துவங்கியது. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளது.