குளிர்ந்த நீரில் நானும் விஜயும்.. வெடுக்கென்று திட்டிய தளபதியின் அப்பா SAC - ஓல்ட் மெமரீஸ் பற்றி பேசிய சங்கவி!
Thalapathy Vijay : கர்நாடகாவில் பிறந்து தமிழ் திரை உலகில் தளபதி விஜய், தல அஜித் என்று பல சூப்பர் ஹிட் நடிகர்களுக்கு நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை சங்கவி. தமிழில் 1993 ஆம் ஆண்டு வெளியான தல அஜித் அவர்களின் அமராவதி திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரை உலகில் நாயகியாக களமிறங்கினார்.
Thalapathy Vijay
இவருக்கு தமிழில் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளியான ரசிகன் என்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 1993ம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்குள் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகியாக மாறினார்.
Sanghavi
மீண்டும் 1995 ஆம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான விஷ்ணு என்ற திரைப்படத்திலும் இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகும் கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்ற திரைப்படத்திலும் தளபதி விஜய் அவர்களுக்கு இவர் ஜோடியாக நடித்திருந்தார். சுமார் 10 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக மாறிய சங்கவி அவர்கள், கடந்த 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு அவ்வப்போது நடிப்பு துறைக்கு வந்து செல்கிறார் என்று தான் கூறவேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Actress Sanghavi
இந்நிலையில் தளபதி விஜயுடன் நடித்த அனுபவங்கள் பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய அவர், SA சந்திரசேகர் இயக்கத்தில் நானும் விஜய்யும் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது குளிர்ந்த நீருக்குள் நாங்கள் இருவரும் குளிப்பது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருந்தது, அப்பொழுது அந்த டேக் முடிந்ததும் நான் சட்டென்று குளத்தில் இருந்து எழுந்து வந்து விட்டேன்.
SAC Movie
ஆனால் விஜய் சற்று நடுங்கிக்கொண்டே எழுந்து நின்றதால் இதை கண்ட அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் அவரை கடிந்து கொண்டு திட்டினார். ஆனால் அதை பொறுப்பெடுத்தாமல் தனது அடுத்த காட்சிக்கு தயாரானார் தளபதி விஜய். இளம் வயதிலேயே தன்னை நோக்கி வரும் நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகரும் ஒரு மாபெரும் வல்லமை விஜயிடம் உண்டு என்று அவர் கூறியுள்ளார்.