பகத் பாசிலை கழட்டிவிட்டு மஞ்சும்மல் பாய்ஸை களமிறக்கிய லோகேஷ் கனகராஜ் - கூலி படத்தில் நிகழ்ந்த திடீர் மாற்றம்

First Published | Jul 20, 2024, 12:31 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் இருந்து பகத் பாசில் நீக்கப்பட்டு அவருக்கு பதில் மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் சேர்க்கப்பட்டுள்ளாராம்.

Coolie

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய ஐந்து திரைப்படங்களும் அதிரி புதிரியான வெற்றியை ருசித்தன. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

Coolie movie update

கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கிரீஷ் கங்காதரன், தற்போது இரண்டாவது முறையாக லோகி உடன் இணைந்துள்ளார்.

இதையும் படியுங்கள்.... Rajinikanth : கிடுகிடுவென ஏறிய பிபி.. அப்புறம் தான் என்ன காரணம்னு தெரிஞ்சுது.. நடிகர் ரஜினி சொன்ன சீக்ரெட்..

Tap to resize

Fahadh Faasil Rejected Rajinikanth's Coolie

கூலி திரைப்படத்தில் நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் அப்படத்தில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கூலி திரைப்படம் எல்சியூ படம் இல்லை என்பதால் தன்னுடைய சினிமேட்டிக் யூனிவர்ஸில் உள்ள நடிகர்களை இதில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் விரும்பவில்லையாம். அதனால் பகத் பாசிலுக்கு பதிலாக வேறு ஒரு மலையாள நடிகரை களமிறக்கி இருக்கிறார்.

soubin shahir

அவர் வேறுயாருமில்லை பகத் பாசிலுக்கு நிகராக மலையாள சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் செளபின் சாஹிர் தான். இவர் மலையாளத்தில் அண்மையில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் குட்டன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை தான் தற்போது பகத் பாசிலுக்கு பதில் நடிக்க கமிட் செய்திருக்கிறாராம் லோகி. மலையாள திரையுலகில் கலக்கி வரும் செளபின் சாஹிருக்கு கூலி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்.... Coolie : லோக்கி இயக்கும் "தலைவரின்" கூலி.. படத்தில் இணைந்த "மாஸ்டர்" நடிகர்? - காஸ்டிங் எல்லாம் பலமா இருக்கே!

Latest Videos

click me!