- Home
- Gallery
- Coolie : லோக்கி இயக்கும் "தலைவரின்" கூலி.. படத்தில் இணைந்த "மாஸ்டர்" நடிகர்? - காஸ்டிங் எல்லாம் பலமா இருக்கே!
Coolie : லோக்கி இயக்கும் "தலைவரின்" கூலி.. படத்தில் இணைந்த "மாஸ்டர்" நடிகர்? - காஸ்டிங் எல்லாம் பலமா இருக்கே!
Super Star Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 171வது பட பணிகளை துவங்கியுள்ளார். கூலி என்ற இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகின்றார்.

Lokesh
பல வெற்றி திரைப்படங்களை கோலிவுட் உலகில் கொடுத்த பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்பொழுது இந்திய சினிமாவில் மிக மூத்த நடிகர் மற்றும் கோலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அவர்களை வைத்து "கூலி" என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.
கிறங்க வைக்கும் லுக்.. சிவப்பு நிற ஆடையில்.. இளசுகளை சொக்க வைக்கும்.. ஐஸ்வர்யா மேனன் க்ளிக்ஸ்!
Shruti
நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இந்த படத்திற்கான பணிகள் துவங்கிய நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய மகள் ஸ்ருதிஹாசன் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியானது.
Reba
இதனை தொடர்ந்து, தளபதி விஜய் அவர்களுடைய "பிகில்" திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற, நடிகை ரெபா மோனிகா ஜான், இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் மோனிகா வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிலும், அதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.
Mahendran
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான தளபதி விஜயின் "மாஸ்டர்" திரைப்படத்தில் குட்டி பவானியாக வந்து அசத்திய நடிகர் மாஸ்டர் மகேந்திரன், கூலி திரைப்பட சூட்டிங்கில் இணைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.