- Home
- Gallery
- Rajinikanth : கிடுகிடுவென ஏறிய பிபி.. அப்புறம் தான் என்ன காரணம்னு தெரிஞ்சுது.. நடிகர் ரஜினி சொன்ன சீக்ரெட்..
Rajinikanth : கிடுகிடுவென ஏறிய பிபி.. அப்புறம் தான் என்ன காரணம்னு தெரிஞ்சுது.. நடிகர் ரஜினி சொன்ன சீக்ரெட்..
தனது உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rajinikanth
தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக ரஜினிகாந்த் இருக்கிறார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராகவே கோலோச்சி வரும் ரஜினிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
Rajinikanth
தற்போது 71 வயதாகும் ரஜினி, இன்றும் அதே துடிப்பு, ஸ்டைலுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அதன்படி ரஜினி நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் இயக்கி இருந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
Rajinikanth
இதை தொடர்ந்து ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தில் தற்போது ரஜினி நடித்து வருகிறார்.
Rajinikanth
இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசிய ரஜினி “ ஒருமுறை நானும் எனது மனைவியும் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தோம். அந்த திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவு மிகவும் சுவையாக இருந்தது. யார் அந்த சமையல்காரர் என்று கேட்டு, விசாரித்தோம். அவர் பெயர் நாராயணன். எங்கள் வீட்டில் ஏற்கனவே இருந்த சமையல்காரருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை வீட்டுக்கு சமைக்க வருகிறீர்களா என்று கேட்டோம். அவரும் வருகிறேன் என்று சொல்லி வீட்டுக்கு வந்த சமைக்க தொடங்கினார்.
Rajinikanth
அவர் சமைத்த உணவுகள் அனைத்தும் மிகவும் சுவையாக இருந்தது. அப்படி ஒரு சுவையில் நாங்கள் சாப்பிட்டது இல்லை. ஒரு கட்டத்தில் எனக்கும் எனது மனைவிக்கும் பிபி ஏறிகிட்டே இருந்தது. அப்போது ஒரு நண்பரை வீட்டுக்கு சாப்பிட அழைத்திருந்தோம்.
Rajinikanth
அந்த நண்பர் தான், இவ்வளவு உப்பு, எண்ணெய் இருக்கும் உணவுகளை எப்படி சாப்பிடுறீங்க என்று கேட்டார். அப்போது தங்களுக்கு பிபி ஏன் அதிகரித்தது என்ற காரணத்தை கண்டறிந்ததாகவும் பின்னர் அந்த சமையல்காரரை மாற்றி சமையலிலும் மாற்றம் கொண்டு வந்த பின் பிபி குறைந்தது” என்று தெரிவித்தார்.
Rajinikanth
மேலும் மருத்துவர் ரவிச்சந்திரன் பற்றியும் பேசினார். தான் இப்போது ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர் தான் காரணம் என்று ரஜினி கூறினார். கிட்னி பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்காக சிகிச்சை பெற்ற போது தான் எனக்கு ரவிச்சந்திரனின் அறிமுகம் கிடைத்து. அப்போது எனக்கு 60% கிட்னி மோசமாகி விட்டது. அவர் பரிந்துரையின் பேரில் தான் தனக்கு அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை செய்யப்பட்டதாகவும் ரஜினி கூறினார்.