கமலின் அந்த படம் ஹிட்டுனு சொல்றதெல்லாம் பொய்... அது மிகப்பெரிய தோல்வி படம் - லிங்குசாமி பரபரப்பு அறிக்கை

First Published Apr 18, 2024, 9:56 AM IST

கமல்ஹாசனின் படத்தால் தான் மிகப்பெரிய அளவில் நஷ்டம் அடைந்ததாக இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Director Lingusamy

தமிழ் திரையுலகில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் லிங்குசாமி. அவர் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தன்னுடைய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்து இருக்கிறார். ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த அந்நிறுவனம், தற்போது படத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருப்பதற்கு உத்தம வில்லன் படமும் ஒரு காரணம். அப்படத்தின் தோல்வியால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்ததாக அவரே பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். 

இந்த நிலையில், உத்தம வில்லன் படம் லாபம் என பத்திரிகையாளர்கள் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து லிங்குசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், “தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன் போன்ற தரமான மிகப்பெரிய வெற்றிப்படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான் பத்மஸ்ரீ திரு கமலஹாசனின் உத்தம வில்லன் படத்தையும் தயாரித்து வெளியிட்டது.

இதையும் படியுங்கள்... காதலன் சித்தார்த்துக்கு பிறந்தநாள்... அன்சீன் புகைப்படங்களை பகிர்ந்து அருவி போல் அன்பைக் கொட்டிய அதிதி ராவ்

முதல் பிரதி அடிப்படையில் நாங்கள் தயாரித்த திரைப்படமான "உத்தம வில்லன்" எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்தியது. இது கமலஹாசன் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். "உத்தம வில்லன்" திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கமலஹாசன் அவர்களும் அவரது சகோதரர் அமரர் திரு.சந்திரஹாசன் அவர்களும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து, தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். 

Uttama Villain

அதற்கான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில், பிரபல YOUTUBE சேனலில் பத்திரிகையாளர் ஒருவர் உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் லிங்குசாமி கூறியதாக இன்று தவறான தகவல்களை கூறியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... நான் மாமாவோட அசிஸ்டண்ட் டைரக்டர் இல்ல; ஷங்கரின் மருமகன் இவ்ளோ பெரிய பணக்காரரா? யார் இந்த தருண் கார்த்திகேயன்?

click me!