நடிகைகள் சினிமாவில் குறுகிய காலம் மட்டுமே ஹீரோயினாக நடிக்க முடியும், வயதாக ஆக அவர்களுக்கு ஹீரோயின் வாய்ப்பு படிப்படியாக குறையும், இதன் காரணமாகவே பல்வேறு முன்னணி நடிகைகள் வயசானதும் ஹீரோயின் ரோல்களுக்கு குட் பாய் சொல்லிவிட்டு அக்கா, தங்கை, அம்மா போன்ற வேடங்களில் நடிக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் ஒரு நடிகை 20 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல. அப்படி ஒரு மகத்தான சாதனையை படைத்திருப்பவர் தான் திரிஷா.