உச்சகட்ட குஷியில் இயக்குனர் முத்தையா.. OTTயில் வெளியாகும் விக்ரம் பிரபுவின் புலிக்குத்தி பாண்டி - எப்போது?

First Published | Nov 9, 2023, 3:39 PM IST

Pulikkuthi Pandi OTT : பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புலிக்குத்தி பாண்டி. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Pulikkuthi Pandi

கிராமத்திய பின்னணியை கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் புகழ்பெற்ற இயக்குனர் முத்தையா கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் நடிப்பில் வெளியான "குட்டிப்புலி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கினார். அதன் பிறகு கார்த்தியின் கொம்பன், விஷாலின் மருது, சசிகுமாரின் கொடிவீரன், கௌதம் கார்த்திக்கின் தேவராட்டம் உள்ளிட்ட திரைப்படங்களை அவர் இயக்கி வந்தார்.

Samantha : பிகினி உடையில்.. சமந்தா நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்! ஹாலிவுட் ஹீரோயின்களே தோத்துடுவாங்க பாஸ்!

Director Muthaiah

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், சமுத்திரகனி, சிங்கம் புலி நடிகர் ஆர் கே சுரேஷ் மற்றும் வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் புலிக்குத்தி பாண்டி.

Tap to resize

Pulikkuthi Pandi Movie

இந்தப் படத்திற்கு பிறகு வருமன் மற்றும் காதர் பாஷா என்கின்ற இரு திரைப்படங்களை இயக்கிய முத்தையாவின் புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நாளை நவம்பர் 10 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos

click me!