Leo Collection: சும்மா தடாலடியா இருக்கே..! இதுவரை வெளிநாட்டில் எந்த படமும் செய்திடாத வசூல் சாதனை படைத்த லியோ!

First Published | Nov 8, 2023, 6:35 PM IST

தளபதி விஜய் நடிப்பில், கடந்த மாதம் வெளியான லியோ திரைப்படம் வெளிநாட்டில் இதுவரை எந்த ஒரு கோலிவுட் திரைப்படமும் செய்திடாத வசூலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் கடந்த மாதம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான திரைப்படம், 'லியோ'. தளபதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், ஒருதரப்பு ரசிகர்கள் மத்தியில், கலவையான விமர்சனங்களை பெற்றாலும்... மற்றொரு தரப்பினர் மத்தியில், பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது.

இந்த படம் வெளியான முதல் நாளே ரூ.148 கோடி வசூல் செய்து, கோலிவுட் திரையுலகை அதிர வைத்த நிலையில், தற்போது வரை இப்படம் 577 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 300 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் படக்குழு அண்மையில், இப்படத்தின் வெற்றியை பிரமாண்ட விழாவோடு கொண்டாடியது. 

Arthika:கார்த்திகை தீபம் சீரியல் நடிகை ஹர்த்திகாவுக்கு நடந்து முடிந்தது திருமணம்! வெட்டிங் போட்டோஸ்!
 

Tap to resize

இந்த நிகழ்ச்சியில் சுமார் ஐந்தாயிரத்திக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டதோடு, பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதே போல், இந்த நிகழ்ச்சியில் 'லியோ' படத்தில் நடித்திருந்த, த்ரிஷா, அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலிகான், ஜனனி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

லியோ திரைப்படம், தமிழகத்தில் மட்டும் இதுவரை 207 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழகத்திற்கு இணையாக வெளிநாடுகளிலும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லியோ' வெளிநாட்டில் மட்டும், 201 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இதுவரை எந்த ஒரு கோலிவுட் படமும் செய்திராத வசூல் சாதனையை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss: இந்த திமிரே உன்ன அழிக்க போகுது! உண்மையை கூறிய அர்ச்சனா - விசித்ரா! ஜோவிகாவின் கேவலமான ரியாக்ஷன்!

Latest Videos

click me!