பூர்வீகம் கேரளா என்றாலும், ஈரோட்டில் பிறந்து அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து அதன் பிறகு திரைத்துறையில் களமிறங்கிய நடிகை தான் ஐஸ்வர்யா மேனன். கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான "காதலில் சொதப்புவது எப்படி" என்கின்ற திரைப்படம் தான் ஐஸ்வர்யா மேனன் முதன் முதலில் நடித்த திரைப்படம்.
அதன் பிறகு "ஆப்பிள் பெண்ணே", "தீயாய் வேலை செய்யும் குமாரு" உள்ளிட்ட படங்களில் அவர் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க துவங்கினார். பெரிய அளவில் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க துவங்கிய ஐஸ்வர்யா மேனனுக்கு தமிழில் ஒரு நல்ல பிரேக் கொடுத்த திரைப்படமாக அமைந்தது தமிழ் படம் 2 என்றால் அது மிகையல்ல.
34
Actress Iswarya
முழுக்க முழுக்க காமெடி படமாக இருந்தாலும் இந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. தற்பொழுது தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன், இவ்வாண்டு மலையாளத்தில் வெளியாக இருக்கும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
44
Actress Iswarya Menon
அதே போல தமிழில் ஐஸ்வர்யா மேனன் இறுதியாக நடித்து வெளியான திரைப்படம் வேழம் தான். தமிழில் கம் பேக் கொடுக்க ஒரு நல்ல திரைப்படத்தை எதிர்நோக்கி அவர் காத்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.