இது ஒரு புறம் இருக்க, கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான தன்னுடைய 3 படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் தயாரிப்பாளராகவும் அறிமுகமான நடிகர் தனுஷ், எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கிச்சட்டை, காக்காமுட்டை, மாரி, நானும் ரவுடிதான் மற்றும் விசாரணை போன்ற பல நல்ல திரைப்படங்களை தனது வண்டர் பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வழங்கி வருகிறார்.
இந்த சூழலில் இறுதியாக கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான தன்னுடைய மாறி 2 திரைப்படத்தை தயாரித்திருந்த நடிகர் தனுஷ், தற்பொழுது தனது இயக்கத்தில் உருவாக இருக்கும் மூன்றாவது திரைப்படத்தையும் அவரே தயாரித்து வெளியிடவிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மாறி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தன்னுடைய திரைப்படம் மற்றும், மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக உள்ள தன் திரைப்படத்தையும் தயாரித்து வழங்குகிறார் தனுஷ்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.