சமீப காலமாக, திரைப்படங்களுக்கு நிகராக சீரியல்களும், இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. திரைப்பட நடிகர்களுக்கு எப்படி ரசிகர்கள் உள்ளார்களே, அதே அளவுக்கு சீரியல் பிரபலங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருவதால், பலர் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகும் சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.