KRK: தமிழ்நாட்டில் இரண்டாம் நாள் முடிவிலும் மாஸ் காட்டும் படம்..பாக்ஸ் ஆபிஸில் எத்தனை கோடி கலைக்ஸன் தெரியுமா?

Published : Apr 30, 2022, 11:21 AM IST

Kathuvakula Rendu Kadhal: விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

PREV
19
KRK: தமிழ்நாட்டில் இரண்டாம் நாள் முடிவிலும் மாஸ் காட்டும் படம்..பாக்ஸ் ஆபிஸில் எத்தனை கோடி கலைக்ஸன்  தெரியுமா?
kathuvakula rendu kadhal

இயக்குநர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணியில், நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமான ‘நானும் ரவுடி தான்' வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன் ''காத்து வாக்குல ரெண்டு காதல்'' படத்தின் மூலம் மீண்டும் தன் வெற்றிக் கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார். 

29
kathuvakula rendu kadhal

கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்தில், இவர்களுடன் சமந்தாவும் இணையத்துள்ளார். பெரும்பாலானோர் சமந்தாவிற்காகவே இந்த படத்தை பார்க்க வருவதாக கூறுவதால், விவகாரத்திற்கு பிறகு அம்மணிக்கு மவுஸு அதிகரித்த வண்ணம் உள்ளது. 
 

39
kathuvakula rendu kadhal

இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாரா தனது சொந்த தாயரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார். 

49
kathuvakula rendu kadhal

அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில், தனது 25 வது படத்தில் மாஸ் கட்டியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். முக்கோண காதல் கதையை மையமாக கொண்ட இந்த படத்தில், கதிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும்,  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

59
kathuvakula rendu kadhal

இவர்கள் இருவரையும் காதலிப்பவராக ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும், டாக்டர் பட புகழ் ரெடின் கிங்ஸ்லி இந்தப் படத்தில் சிறப்பான காமெடியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

69
kathuvakula rendu kadhal

மொத்தத்தில், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நிச்சயம் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ஹிட் படம் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. 

79
kathuvakula rendu kadhal

பட ரிலீஸின் போது ஒருபக்கம் சமந்தா பிறந்தநாள் கொண்டாட, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

89
kathuvakula rendu kadhal

இந்நிலையில், தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று தந்துள்ள காத்து வாக்குல இரண்டு படத்தின் தகவல் மற்றும் வசூல் விவரம் வெளிவந்த வண்ணம் உள்ளது

99
kathuvakula rendu kadhal

சென்னையில் மட்டும் முதல் நாளில் படம் ரூ. 66 லட்சம் வசூலித்து தந்தது. தமிழகத்தில் மொத்தம் ரூ. 5 கோடி வரை வசூலித்தது. தற்போது இரண்டு நாள் முடிவில், தமிழகத்தில் படம் மொத்தமாக ரூ. 8 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாம். இனி வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என ரசிகர்கள் கூறி வேறுகின்றனர். 

Read more Photos on
click me!

Recommended Stories