நடிகை காஜல் அகர்வால், தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கர்களுடன் நடித்து புகழ் பெற்றவர். இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
27
Acharya
நடிகை காஜல் அகர்வால் பிரபல தொழிலதிபர் கவுதம் என்பவரை காதலித்து, கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.மேலும், கடந்த ஆண்டு தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை கவுதம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில், நடிகை காஜலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
37
Acharya
இந்நிலையில், குடும்பம் மற்றும் குழந்தை ஆகியவற்றில் பிஸியாக இருக்கும் காஜல், கொரடலா சிவா இயக்கத்தில், சிரஞ்சீவிவிக்கு ஜோடியாக ஆச்சார்யா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் காட்சிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
47
Acharya
இந்த படத்தில் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலை சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது சரியல்ல என பின்னர் தோன்றியதால் அந்த காட்சிகளை நீக்கியுள்ளனர்.
57
Acharya
தெலுங்கு திரைப்படமான இந்த படத்தை, மேட்டினி என்டர்டெயின்மென்ட் மற்றும் கொனிடேலா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது .இந்த படத்தில் ராம் சரணும், நீலாம்பரியாக பூஜா ஹெக்டே மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
67
Acharya
மணி சர்மா இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் 29 ஏப்ரல் 2022 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் விழா படு வேகமாக நடைபெற்று வருகிறது.
77
Acharya
இந்நிலையில், ஆச்சார்யா படத்தில் இடம்பெறாத காட்சிக்கு காஜல் அகர்வாலுக்கு ரூ 1.50 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், இந்த செய்தி இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.