Venkat prabhu: அஜித், விஜய் கூட்டணியில் மங்காத்தா 2 படம்..? வெங்கட் பிரபு சொன்ன சூப்பர் தகவல்...

Anija Kannan   | Asianet News
Published : Apr 30, 2022, 09:51 AM IST

Venkat prabhu: தமிழ்நாட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்களது கூட்டணியில் அடுத்ததாக வெங்கட் பிரபு மங்காத்தா 2 படம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

PREV
18
Venkat prabhu: அஜித், விஜய் கூட்டணியில் மங்காத்தா 2 படம்..? வெங்கட் பிரபு சொன்ன சூப்பர் தகவல்...
Ajith vijay

அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒரே கால கட்டத்தில், சினிமாவில் அறிமுகமானார்கள். ஆரம்ப காலத்தில், பல்வேறு விமர்சனங்களை கடந்து இருவரும் ஒரே மாதிரியான வளர்ச்சி கண்டவர்கள்.

28
Ajith, vijay

முதலில், இருவரும் காதல் படங்களில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினர். அதன் பின் 2000 களில் ஆக்க்ஷன் ஹீரோவாக இருவரும் அவதாரம் எடுத்தபோது தான் இவர்களை போட்டி நடிகர்களாக ரசிகர்கள் பாவித்தனர். 

38
Ajith, vijay

அடுத்தடுத்து இருவரும் மாறி மாறி ஹிட் படங்களை கொடுத்து வந்தனர். இன்று வரை அது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. என்னதான் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டாலும் இன்று வரை இருவரும் நண்பர்களாகவே  இருந்து வருகின்றனர்.

48
Ajith, vijay

மேலும் இவர்களுக்குள்ளும் ஆரோக்கியமான போட்டி நிலவியதாகவே சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. அஜித் தற்போது, வலிமை படத்திற்கு பிறகு அதே கூட்டணியில் AK61 படத்தில் நடித்து வருகிறார். 

58
Ajith, vijay

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தை தொடர்ந்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

68
Ajith, vijay

அதேபோன்று, நடிகர் விஜய் கலவையான விமர்சனத்தை பெற்ற பீஸ்ட் படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கின்றார். இதையடுத்து, விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கின்றார்.

78
mankatha

முன்னதாக, அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கிய படத்தில் அவர் நெகடிவ் வேடத்தில் நடித்து இருப்பார். அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

88
Ajith Mankatha

இந்நிலையில், அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து மங்காத்தா 2 எடுக்க விரும்பியதாகவும், அதை மங்காத்தா ஷூட்டிங் நேரத்தில் இருவரிடமும் கதை சொன்னதாகவும், வெங்கட் பிரபு சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அந்த படம் விரைவில் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories