அதாவது, தீபா பாட்டு பாட தொடங்க அவள் அங்கு பாடப் பாட அபிராமிக்கு உடலில் அசைவுகள் ஏற்பட்டு தீபா பாடி முடித்ததும் கண் திறக்க ரம்யா எல்லாத்துக்கும் காரணம் நான் பரிகாரம் செய்தது தான் என்று கிரெடிட்டை எடுத்துக் கொள்கிறாள். இதைப் பார்த்து தீபா கொஞ்சம் வருத்தப்பட கார்த்திக் அம்மா குணமாக உங்களுடைய பாட்டு தான் காரணம்னு எனக்குத் தெரியும் என்று ஆறுதல் சொல்கிறான்.