காவாலா டான்ஸுக்கு பின் கிடைத்த கெளரவம்... ஜப்பான் அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதராக தமன்னா நியமனம்

Published : Oct 12, 2023, 10:28 AM IST

ஜப்பானின் புகழ்பெற்ற அழகு சாதன நிறுவனமான ஷிசிடோவின் முதல் இந்திய தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டு உள்ளார்.

PREV
14
காவாலா டான்ஸுக்கு பின் கிடைத்த கெளரவம்... ஜப்பான் அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதராக தமன்னா நியமனம்
Tamannaah

ரசிகர்களால் மில்க் பியூட்டி என செல்லமாக அழைக்கப்படுபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் தமன்னா. இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கிய இப்படத்தில் சினிமா நடிகையாகவே நடித்திருந்தார் தமன்னா. 

24
Tamannaah Bhatia

குறிப்பாக இப்படத்தில் தமன்னா ஆடிய டான்ஸ் வேறலெவலில் ஹிட் ஆனது. காவாலா பாடலுக்கு இவர் ஆடிய கவர்ச்சி நடனம் இன்றளவும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை ஆக்கிரமித்து உள்ளன. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை தமன்னாவுக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் பிசியாக நடித்து வருகிறார் தமன்னா.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Tamannaah as Shiseido ambassador

இந்த நிலையில், நடிகை தமன்னாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது. ஜப்பானின் புகழ்பெற்ற அழகு சாதன நிறுவனமான ஷிசிடோவின் இந்திய தூதராக தமன்னா நியமிக்கப்பட்டு உள்ளார். இதன்மூலம்  ஷிசிடோவின் முதல் இந்திய தூதர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி உள்ளார் தமன்னா. இதனால் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

44
Tamannaah Indian ambassador of Shiseido

இது குறித்து இன்ஸ்டாவில் கருத்து தெரிவித்துள்ள தமன்னா, 100 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது தரத்தை பராமரித்து வரும் ஷிசிடோ நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், அழகு என்பது வெளிப்புற தோற்றமல்ல, தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் பெறுவதும் கூட என, தான் நம்புவதாக கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்... லியோ வெற்றிபெற வேண்டி... திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - வைரலாகும் வீடியோ

Read more Photos on
click me!

Recommended Stories