கார்த்தி NO சொன்ன கதை.. "யோசிக்காம நடித்து மொக்கை வாங்கினேன்".. ஆர்யா சொன்ன தகவல்!.. எந்த படமா இருக்கும்?

Ansgar R |  
Published : Oct 29, 2023, 06:16 PM IST

தமிழ் திரை உலகத்திற்கு குக்கூ மற்றும் ஜோக்கர் ஆகிய இரண்டு நல்ல திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் தான் ராஜு முருகன். இவருடைய இயக்கத்தில் தற்பொழுது வெளியாகவுள்ள திரைப்படம் தான் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் என்கின்ற திரைப்படம்.

PREV
13
கார்த்தி NO சொன்ன கதை.. "யோசிக்காம நடித்து மொக்கை வாங்கினேன்".. ஆர்யா சொன்ன தகவல்!.. எந்த படமா இருக்கும்?
rolex

நேற்று ஜப்பான் திரைப்படத்தின் ஈவென்ட் ஒன்று நடைபெற்றது இதில் நடிகர் கார்த்தியின் அண்ணன் நடிகர் சூர்யா, நடிகர் விஷால், நடிகர் ஜெயம் ரவி, நடிகர் ஆர்யா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

அஜித்துடன் அடுத்த படம் எப்போ?... ஆள விடுங்கடா சாமினு கும்பிடுபோட்டு கிளம்பிய இயக்குனர் சிவா

23
Tamannaah

அப்பொழுது ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்தும் டெல்லி கதாபாத்திரம் குறித்தும் பல விஷயங்களை நடிகர் சூர்யாவும், கார்த்தியும் மேடையில் ஏறி பேசியது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு மேடை ஏறி பேசிய நடிகர் ஆர்யா, கார்த்தி வேண்டாம் என்று நிராகரித்த ஒரு கதையை கேட்டு நான் நடித்தேன். ஆனால் படம் வெளியான பிறகு தான் கார்த்தி ஏன் நிராகரித்தார் என்று புரிந்து கொண்டேன்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

 

33
Arya

கார்த்திக்கு கதையை தேர்வு செய்யும் தன்மை மிகவும் நன்றாக இருக்கிறது, ஆகவே இனி கார்த்தி வேண்டாம் என்று சொல்லும் கதைகளில் நானும் நடிக்கப் போவதில்லை என்று கூறினார். நடிகர் ஆர்யா இந்த தகவலை வெளியிட்டதுமே, பல நெட்டிசன்கள் ஜப்பான் திரைப்பட விழாவில் ஆர்யா குறிப்பிட்ட அந்த திரைப்படம் முத்தையா இயக்கத்தில் அண்மையில் ஆர்யா நடித்து வெளியான காதர் பாஷா என்கின்ற முத்துராமலிங்கம் திரைப்படம் தான் என்று கூறி மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.

Raghava Lawrence Net Worth: சத்தமில்லாமல் வளர்ந்து.. கோடிகளில் சம்பளம் வாங்கும் லாரன்ஸ் சொத்து மதிப்பு விவரம்!

Read more Photos on
click me!

Recommended Stories