நீதா அம்பானி உடல் எடையை இப்படி தான் கம்மி பண்ணாங்களாம்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க சிம்பிள் தான்.!

First Published | Oct 14, 2023, 3:50 PM IST

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையால் எப்போதுமே செய்திகளில் முதன்மையாக வருபவர். மேலும், ஐம்பது வயதைத் தாண்டியாலும் இன்னும் இருபது வயதுப் பெண்ணாகவே காட்சியளிக்கிறார். உடல் எடையை குறைக்க நீதா அம்பானி என்ன செய்தார் தெரியுமா?

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் நிறுவனர் மற்றும் மும்பை இந்தியன்ஸின் உரிமையாளரான நீதா அம்பானி, இந்தியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவர். அழகு, எளிமை, புத்திசாலித்தனம் என அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. ஐம்பது வயதைத் தாண்டியாலும் இன்னும் இருபது வயதுப் பெண்ணாகவே இருக்கிறார். உடல் எடையை குறைக்க நீதா அம்பானி என்ன செய்தார் தெரியுமா?

நடனம் ஆடுவது: நீதா அம்பானி நல்ல நடனக் கலைஞர். ஓய்வு நேரத்தை நல்ல பாடல்களுக்கு நடனமாடுவதில் செலவிடுகிறார். நடனம் கைகளையும் கால்களையும் சுறுசுறுப்பாக்குகிறது. உடல் உறுப்புகளை தளர்த்தும். இது அவருக்கு ஒரு நல்ல பயிற்சியாகும்.

Tap to resize

பீட்ரூட் ஜூஸ்: எடை கூடாமல் இருக்க நிதா அம்பானி லேசான உணவை மட்டுமே சாப்பிடுவார். அவர் குறிப்பாக காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிக்க விரும்புவாராம்.

இதையும் படிங்க:  ரூ.240 கோடி ஜெட் முதல் 100 கோடி நகை கலக்‌ஷன் வரை.. நீட்டா அம்பானியிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்கள்..

பச்சை காய்கறிகள்: நிதா அம்பானி பச்சை அல்லது சமைத்த பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிடுவார். பச்சைக் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது இயற்கையாகவே உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் வைட்டமின்களை அதிகரிக்கிறது. ஊட்டச்சத்துக்காக கூடுதல் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் பழங்களை தவறாமல் சாப்பிடுவாராம்.

இதையும் படிங்க:  "எல்லார் கண்ணும் இவங்க மேல தான்..” பிரம்மாண்ட வைர நகைகளால் ஜொலித்த நீட்டா அம்பானி..

உடற்பயிற்சி: ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறோமோ, அவ்வளவு சுறுசுறுப்பாக உடல் மாறும். மேலும் ஆரோக்கியமாக இருக்க முடியும். நீதா அம்பானியும் இதைதான் செய்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

டிடாக்ஸ் வாட்டர்: நீதா அம்பானி டிடாக்ஸ் தண்ணீரை தவறாமல் குடிப்பார். ஒரு நாளைக்கு ஐந்து விதமான டிடாக்ஸ் நீர் அவரது உணவு பட்டியலில் உள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றம் மட்டுமல்ல, சருமத்தை இறுக்கமாக்குவதாகவும் கூறப்படுகிறது.

Latest Videos

click me!