Night Bath : பகலை விட இரவு தூங்கும் முன் குளிச்சா இத்தனை நன்மைகளா..? அவசியம் தெரிஞ்சிகோங்க!

Published : Apr 18, 2024, 03:14 PM ISTUpdated : Apr 18, 2024, 03:31 PM IST

அனைவரும் காலை குளிப்பது வழக்கம். ஆனால், இரவில் குளிப்பதால் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?  

PREV
17
Night Bath : பகலை விட இரவு தூங்கும் முன் குளிச்சா இத்தனை நன்மைகளா..? அவசியம் தெரிஞ்சிகோங்க!

தற்போது கோடை காலம் என்பதால், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பார்கள். அதுவும் தூங்குவதற்கு முன் குளிப்பதை பலர் விரும்புகிறார்கள். இரவில் குளிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

27

மேலும் இது ஒரு நல்ல பழக்கம், ஏனென்றால் நாள் முழுவதும் வெளியில் இருக்கும் போது தூசி மற்றும் கிருமிகளை படுக்கைக்குச் செல்லும் முன் கழுவுவது நல்லது.  இப்போது தூங்குவதற்கு முன் ஏன் குளிக்க வேண்டும் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

37

சருமத்திற்கு நல்லது: இரவு தூங்க செல்வதற்கு முன் குளிப்பது சருமத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில், இது உடலில் உள்ள அனைத்து கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும். இதனால் உடலில் இருந்து பாக்டீரியா தொற்று மற்றும் தோல் பிரச்சனை குறையும்.

47

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்: உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தூங்கும் முன் குளிப்பது மிகவும் நல்லது. இரவில் குளிப்பதால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். மேலும் உடல் உஷ்ணம் அதிகரிப்பதை, கட்டுப்பாட்டில் வைத்திருக்க இரவில் குளிப்பது மிகவும் அவசியம்.

57

மனதும், உடலும் புத்துணர்ச்சியாகும்: இரவில் குளித்தால், உடனே நம் மனதையும் உடலையும் புத்துணர்ச்சி அடையும். இதன் மூலம் மனம் மற்றும் உடல் இரண்டிலிருந்தும் மன அழுத்தத்தைப் போக்க பெரிதும் உதவுகிறது. பிறகு இறுதியில் நன்றாக தூங்க உதவுகிறது.

இதையும் படிங்க:  குளித்த உடனேயே சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

67

மன அழுத்தத்தை நீக்கும்: மன அழுத்தத்தில் இருந்து விடுபட இரவில் தூங்கும் முன் குளிப்பதே சிறந்த வழி. இது மூளையின் சிறந்த செயல்பாட்டிற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி, இரவில் குளிப்பதும் உங்களுக்கு நன்றாக தூங்க உதவுகிறது.

இதையும் படிங்க:  குளிக்கும்போது "இந்த" 5 உடல் உறுப்புகளை சுத்தம் செய்யாவிட்டால் ஆபத்து..!

 

77

உடல் எடையை குறைக்கும்: தூங்கும் முன் குளித்தால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அது மட்டுமின்றி, இரவில் குளிப்பது ஒற்றைத் தலைவலி, உடல்வலி, மூட்டு வலி மற்றும் பெரிய தசைப்பிடிப்பு போன்றவற்றிலிருந்தும் நிவாரணம் பெறலாம். எனவே, இவ்வளவு நன்மைகள் கிடைப்பதால், தூங்கும் முன் குளிக்க மறக்காதீர்கள்...!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Read more Photos on
click me!

Recommended Stories