ஆதி குணசேகரன் இல்லாமல் டல்லடிக்கும் எதிர்நீச்சல்.. 4 டாப் நடிகர்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தை - யார் அவர்கள்?
Ansgar R |
Published : Sep 17, 2023, 06:27 PM IST
பிரபல நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து அவர்களுடைய மறைவு ஒட்டுமொத்த திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக அவர் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியல், ஆதி குணசேகரன் இல்லாமல் சற்று டல்லடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் மாரிமுத்து அவர்கள் சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார், இந்நிலையில் அவர் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த படியாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி தொடர்ச்சியாக இருந்து வருகிறது. முதலில் அவருடைய கதாபாத்திரத்தில் பிரபல வெள்ளித்திரை நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியானது.
ஆனால் அவர் நடிப்பதிலும் சில சிக்கல்கள் உள்ளதால், அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் மிக மூத்த நடிகரான ராதா ரவி அவர்களிடம் தற்பொழுது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
34
Pasupathy
அதேபோல சினிமா துறையில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த நடிகர் பசுபதி அவர்களிடமும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சீரியல் வட்டாரங்கள் தகவல்கள் அளித்து வருகின்றது.
44
Ilavarsu
ஏற்கனவே 3 நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசு அவர்களிடமும் தற்பொழுது இந்த சீரியலில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆதி குணசேகரன் அவர்களுடைய கதாபாத்திரத்தில் அடுத்தபடியாக யார் நடிக்கவிருக்கிறார் என்கின்ற எதிர்பார்ப்பு பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.