பால் டீயை அதிகம் கொதிக்க வைத்து குடிச்சா இந்த ஆபத்துகள் எல்லாம் வருமா.. ஆய்வு தரும் எச்சரிக்கை!

Published : May 29, 2024, 12:53 PM ISTUpdated : May 29, 2024, 01:04 PM IST

பால் டீயை அதிக நேரம் கொதிக்க வைப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல.  இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.  

PREV
17
பால் டீயை அதிகம் கொதிக்க வைத்து குடிச்சா இந்த ஆபத்துகள் எல்லாம் வருமா.. ஆய்வு தரும் எச்சரிக்கை!

பால் டீயை விரும்பி குடிப்போர் நம்மில் பலர் உண்டு. பால் டீயை விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு பலமுறை அதை குடிப்பார்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபட இது உங்களுக்கு கை கொடுக்கும். மேலும் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமூட்டும். ஆனால், இது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். 

27

அது என்னவென்றால், பால் டீயை நீண்ட நேரம் கொதிக்க வைத்து குடித்தால் அது ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துமாம். இப்போது, இதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி இங்கு தெரிந்துகொள்ளுங்கள். 

37

ஊட்டச்சத்து இழப்பு: பால் டீயை அதிக நேரம் கொதிக்க வைத்தால் அதன் ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். ஏனெனில், பாலில் கால்சியம், புரத மற்றும் வைட்டமின் டி போன்ற அத்தியாவாசி ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பாலை அதிக நேரம் கொதிக்க வைத்தால் இவற்றை இழக்க நேரிடும்.

47

சுவை மாறும்: பால் டீயை அதிக நேரம் கொதிக்க வைத்தால் அதன் சுவையை அது இழக்கும். உதாரணமாக, கசப்பான அல்லது விரும்பத்தகாத சுவையை கொடுக்கும். சொல்ல போனால், இது டீயின் உண்மையான சுவையை அளித்து விடும்.

57

தன்மையை இழக்கும்: பால் லைட் பாலிடியை அதிகமாக கொதிக்க வைக்கும் போது அது தன்மையை இழந்து புரதத்தை உறைய வைக்கிறது. இது பொருந்தாத அல்லது தயிர் வடிவத்தை குறிக்கிறது. இன்னும் சொல்ல போனால் பால் டீயின் மென்மையான நிலைத்தன்மைக்கு பதிலாக, பார்ப்பதற்கு விரும்பத்தகாதவையாக இருக்கும்.

இதையும் படிங்க:  'இந்த' பிரச்சனை உள்ளவர்கள் தப்பி தவறி கூட ஒருபோதும் ஈவ்னிங் டீ குடிக்காதீங்க!

67

ஆக்ஸிஜனேற்ற பண்புகள் குறையும்: பால் டீயை அதிகம் கொதிக்க வைத்தால் பாலின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சிதையும். இதனால் பல ஆரோக்கிய நன்மைகள் இழக்க நேரிடும். இன்னும் சொல்லப்போனால் பால் டீயை அதிகமாக கொதிக்க வைப்பதும் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் சில அத்தியாவாசிய சேர்மங்களை நீங்கள் இழக்க நேரிடும்.

இதையும் படிங்க:  தேநீர் அருந்தியதும் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்..? அப்போது உங்களுக்காக தான் இந்த பதிவு..!!

 

77

செரிமான பிரச்சனைகள் ஏற்படும்: அதிகம் கொதிக்க வைத்த பால்டியை குடிப்பது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.ஏனெனில், அது கொதிக்கும்போது, அதன் புரத கட்டமைப்பை மாற்றுகிறது. இதனால் அதைக் குடித்த பிறகு ஜீரணிக்க கடினமாகிறது.  இது வாயு வீக்கம் மற்றும் வயிறு அசெளகரியம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுதும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Read more Photos on
click me!

Recommended Stories