கண்ணுபட போகுதுப்பா.. மகனுடன் செல்லமாக விளையாடும் ஜவான் அட்லீ - சுத்திப்போட சொல்லும் ரசிகர்கள்!

Ansgar R |  
Published : Sep 21, 2023, 06:15 PM IST

தமிழ் திரை உலகில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி குமார் அவர்களுக்கும், நடிகை கிருஷ்ணா பிரியா அவர்களுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் இந்த ஜோடிக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

PREV
13
கண்ணுபட போகுதுப்பா.. மகனுடன் செல்லமாக விளையாடும் ஜவான் அட்லீ - சுத்திப்போட சொல்லும் ரசிகர்கள்!
Director Atlee

பிரபல இயக்குனர் சங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, அதன் பிறகு இயக்குனராக அவதாரம் எடுத்தவர் தான் அட்லீ குமார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கினார்.

முதன்முறையாக தன்னுடைய 3 பிள்ளைகளை அறிமுகப்படுத்திய குக் வித் கோமாளி பாலாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

23
Atlee with wife

அதன் பிறகு தொடர்ச்சியாக தளபதி விஜய் அவர்களை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என்று மூன்று ஹிட் படங்களை கொடுத்து டாப் இயக்குனர்கள் வரிசையில் சேர்ந்தார் இயக்குனர் அட்லி என்றால் அது மிகையல்ல. இறுதியாக அவர் பாலிவுட் உலகின் பாட்ஷாவாக திகழ்ந்துவரும் நடிகர் சாருக் கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

33
Atlee

ஜவான் திரைப்படம் உலக அளவில் சுமார் 800 கோடி ரூபாயை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது என்றால் அது மிகையல்ல இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகன் நீர் ஆகியோருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

விஜய்யிடம் கால்ஷீட் இல்லாததால்... மாஸ் நடிகருக்கு வலைவீசும் அட்லீ & நெல்சன் - அந்த ஜாக்பாட் வாய்ப்பு யாருக்கு?

Read more Photos on
click me!

Recommended Stories