'படையப்பா' படத்தில் நீலாம்பரியாக நடிக்க இருந்தது இவர் தான்! உங்க மூஞ்சி செட் ஆகலனு திருப்பி அனுப்பிய சோகம்!

Published : Feb 29, 2024, 03:50 PM ISTUpdated : Feb 29, 2024, 05:19 PM IST

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணாவுக்கு முன்பு, நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?   

PREV
16
'படையப்பா' படத்தில் நீலாம்பரியாக நடிக்க இருந்தது இவர் தான்! உங்க மூஞ்சி செட் ஆகலனு திருப்பி அனுப்பிய சோகம்!
padaiyappa

 ரஜினிகாந்தின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த திரைப்படம் 'படையாப்பா'. இந்த படத்தில் சிவாஜி கணேசன் அவரது தந்தையாக நடித்திருந்தார். மேலும் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடிக்க, லட்சுமி, ராதா ரவி, நாசர், அப்பாஸ், பிரீத்தா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

26
padaiyappa

ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரிகாக மிரள வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக இந்த படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நிகரான நடிப்பை ரம்யா கிருஷ்ணன் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஸ்வின் ககுமனுவின் தாயார் இந்த நடிகையா? அவர் நடித்து வெளியான படத்தின் புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

36
padaiyappa

ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தை கே சத்யநாராயணா, எம் பி கிருஷ்ணராவ், விட்டார் பிரசாத், பி எல் தேனப்பன் ஆகியோர் இணைந்து, அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்திருந்தனர். சுமார் 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடிய வசூல் சாதனை செய்தது இப்படம்.

46
padaiyappa

மேலும் நீலாம்பரியாக நடித்த, நடிகை ரம்யா கிருஷ்ணன் ஃபிலிம் சார் விருது, தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கி குவித்தார். ரம்யா கிருஷ்ணன் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த இந்த படத்தில், நீலாம்பரி வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவலை, தன்னுடைய பழைய பேட்டி ஒன்று இப்படத்தின் இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய ஹீரோ! 'அன்பே வா' டெல்னா நடிக்கும் புதிய சீரியலுக்கு பூஜை போட்டாச்சு!

56
Meena

 

 

 இது குறித்து அவர் கூறுகையில்,  'படையப்பா படத்தில், நீலாம்பரி வேடத்தில் முதலில் நடிக்க கம்மிட் ஆனவர் நடிகை மீனா தான் என்றும், ஆனால் அவரின் அப்பாவித்தனமான முகம் நீலாம்பரி வேடத்திற்கு பொருந்தவில்லை. எனவே ரம்யா கிருஷ்ணாவை இப்படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்ததாக தெரிவித்தார்.

66
padaiyappa

எனவே வசுந்தரா வேடத்தில் மீனாவை நடிக்க வைக்கலாம் என்கிற யோசனையில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் சிம்ரனிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்க, சூழ்நிலை காரணமாக இருவருமே இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதன் பின்னரே சௌந்தர்யா வசுந்தரா வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாதாக தெரிவித்துள்ளார்.

பா. ரஞ்சித் படத்தில் ஹீரோவான ஜீவி பிரகாஷ்! ஹீரோயினாகும் வாரிசு நடிகை.. ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories