குட்டி நயன் உடன் ரொமான்ஸ் செய்த தனுஷ் மருமகன்! காதலர்தின ஸ்பெஷலாக வந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ Poster

Published : Feb 15, 2024, 08:21 AM IST

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் ரொமாண்டிக் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

PREV
14
குட்டி நயன் உடன் ரொமான்ஸ் செய்த தனுஷ் மருமகன்! காதலர்தின ஸ்பெஷலாக வந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ Poster
Anikha, pavish

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ், இவர் கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்க உள்ள ராஞ்சனா 2 படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படி பான் இந்தியா ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார் தனுஷ்.

24
Director dhanush

பான் இந்தியா அளவில் பிசியான நடிகராக வலம் மறுபுறம் இயக்குனராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். பா.பாண்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ், அடுத்ததாக தன்னுடைய 50-வது படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதையும் படியுங்கள்... புது கார் வாங்கிய ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி! தக் லைஃப் நாயகி வாங்கிய காஸ்ட்லி காரின் விலை எவ்வளவு தெரியுமா?

34
Nilavukku Enmel Ennadi Kobam Movie

இதுதவிர தனுஷ் இயக்கத்தில் மற்றுமொரு படமும் தயாராகி வருகிறது. அப்படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என பெயரிடப்பட்டு உள்ளது. அப்படத்தில் ஹீரோவாக தனுஷ் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவர் இப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இதில் பவிஷுக்கு ஜோடியாக குட்டி நயன் அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி வருகிறது.

44
Nilavukku Enmel Ennadi Kobam Movie Valentines Day Poster

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த நிலையில் காதலர் தினத்தையொட்டி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் ரொமாண்டிக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த போஸ்டரில் பவிஷ் உடன் அனிகா கடற்கரையில் அமர்ந்திருக்கும் ரொமாண்டிக் போட்டோ இடம்பெற்று உள்ளது. அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்... ரெட் ஹாட் உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்து.... இளம் நெஞ்சங்களின் ஹார்ட் பீட்டை எகிறவைத்த விஜே அஞ்சனா

Read more Photos on
click me!

Recommended Stories