நடிப்புக்கு எதிராக சதி.. படிப்பில் சாதித்த காமெடி நடிகர்! B.Lit பர்ஸ்ட் கிளாசில் பாஸ்.. குவியும் வாழ்த்துக்கள்

Published : Dec 26, 2023, 01:18 PM IST

பிரபல காமெடி நடிகர், முத்து காளை நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும்... தற்போது படிப்பில் சாதித்துள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  

PREV
15
நடிப்புக்கு எதிராக சதி.. படிப்பில் சாதித்த காமெடி நடிகர்! B.Lit பர்ஸ்ட் கிளாசில் பாஸ்.. குவியும் வாழ்த்துக்கள்
muthukalai

ராஜபாளையத்தில் பிறந்து வளர்ந்தவர் பிரபல காமெடி நடிகர் முத்து காளை. சண்டை பயிற்சியாளராக வேண்டும் என்கிற கனவுடன் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடினார். மேலும் தன்னை ஒரு ஸ்டண்ட் பயிற்சியாளராக மெருகேற்றிக்கொள்ள, 18ஆவது வயதில் கராத்தேவில் கருப்பு பட்டையைப் பெற்றார். மேலும் சிலம்பம், களரி போன்ற பல தற்காப்பு பயிற்சிகளையும் நன்கு அறிந்தவர்.

25
muthukalai

சில படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றியுள்ள இவர், 1997-ஆம் ஆண்டு வெளியான பொன்மனம் என்கிற படத்தில் நடிகராக அறிமுகமானார். இவரின் உடல் மொழியும், டயலாக் டெலிவரியும் ஒரு நகைச்சுவை நடிகராக இவரை ரசிகர்கள் மனதில் நிலை நிறுத்தியது. பல படங்களில் வடிவேலுவுடன் இணைந்து காமெடி காட்சியில் இணைந்தார்.

புடிச்சாலும் புளியங்கொம்பு.. ராதா மகள் கார்த்திகாவின் கணவர் ரோஹித் மேனனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

35

ஒரு கட்டத்தில் குடிக்கு அல்வா வாசுவுடன் சேர்ந்து... குடிக்கு அடிமையான இவருக்கு அறிவுரை கூறி நிறுத்தியவர் வடிவேலு தானாம். அவர் கூறிய அறிவுரையால் மனைவி, பிள்ளைகள் இருப்பதை உணர்ந்து குடி பழக்கத்தை மெல்ல மெல்ல கை விட்டதாக அவரே பேட்டியிலும் தெரிவித்தார்.
 

45
muthukalai

அதே போல் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததற்கு காரணம் கூட வடிவேலு தான். நடிகர் விவேக்குடன் சேர்ந்து காமெடி காட்சியில் நடித்ததால்... பல படங்களில் இவருக்கு வாய்ப்புகள் மறுக்க பட்டதாக கூறப்படுகிறது. 

அழகில் ஆலியா பட்டை உரித்து வைத்திருக்கும் ராஹா! முதல் முறையாக குழந்தை முகத்தை ரசிகர்களுக்கு காட்டிய ரன்பீர்!

55

நடிக்கும் வாய்ப்பு.. சில நய வஞ்சகத்தால் மறுக்கப்பட்ட நிலையில், படித்து சாதிக்க வேண்டும் என நினைத்தார் முத்து காளை. படித்து பட்டம் வாங்க வேண்டும் என,  திறந்தவெளி பல்கலை கழகம் மூலம் கடந்த 2017-ஆம் ஆண்டு பிஏ தமிழ் வரலாற்றில் இரண்டாம் வகுப்பிலும், 2019 ஆம் ஆண்டு எம்ஏ தமிழ் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் முத்துக்காளை. இதை தொடர்ந்து, இளங்கலை தமிழ் இலக்கிய தேர்வில் (B.Lit) பட்டம்  முதல் வகுப்பில் பெற்றுள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories