தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடியன் என்றால் அது வடிவேலு தான். என் ராசாவின் மனசினிலே படம் மூலம் நடிகர் ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார் வடிவேலு. கவுண்டமணி, செந்தில் ஆகியோர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும், உடல்மொழியாலும் அனைவரையும் சிரிக்க வைத்து அழகு பார்த்தார் வடிவேலு. இவர் கொடுக்காத ரியாக்ஷனே இல்லை என சொல்லும் அளவுக்கு எக்கச்சக்கமான ரியாக்ஷன்களை கொடுத்து காமெடி செய்திருக்கிறார்.