Vikram : கோலிவுட்டின் ‘சீயான்’ இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா? நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு இதோ

Published : Apr 17, 2024, 09:40 AM IST

நடிகர் விக்ரம் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
Vikram : கோலிவுட்டின் ‘சீயான்’ இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா? நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு இதோ
Vikram

நடிகர் விக்ரம் கடந்த 1966-ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பிறந்தார். இவரது தந்தை பெயர், வினோத்ராஜ், தாயார் பெயர் ராஜேஸ்வரி. இவரின் இயற்பெயர் கென்னடி. ஏற்காட்டில் பள்ளிப்படிப்பை முடித்த விக்ரமுக்கு இளம் வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது. கல்லூரிப்படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் படித்தார் விக்ரம். அப்போது கல்லூரியில் மேடை நாடகங்களிலும் அவர் நடித்து வந்துள்ளார்.

26
Chiyaan Vikram

அப்படி ஒருமுறை மேடை நாடகம் ஒன்றில் நடித்ததற்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்திருக்கிறது. அந்த விருதை பெற்றுக் கொண்டு பைக்கில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த விக்ரம் எதிர்பாராத விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து மூன்று ஆண்டுகள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த விக்ரமுக்கு 23 தையல்கள் போடப்பட்டதோடு, ஒரு பக்கம் காலை எடுக்க வேண்டிய சூழலும் வந்துள்ளது. ஆனால் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையாலும் அவரின் மன உறுதியாலும் மீண்டும் எழுந்து நடக்க தொடங்கினார் விக்ரம்.

36
Vikram Birthday

பின்னர் விளம்பரப் படங்களில் நடித்து வந்த விக்ரம் கடந்த 1990-ம் ஆண்டு வெளிவந்த ‘என் காதல் கண்மணி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். இவரது தந்தையும் ஒரு நடிகர் என்பதால் எளிதில் சினிமாவுக்குள் நுழைந்த விக்ரமுக்கு வெற்றி என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. திரைத்துறையில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 9 ஆண்டுகள், ஸ்ரீதர், எஸ்.பி.முத்துராமன், பி.சி.ஸ்ரீராம், ஷாஜி கைலாஷ், விக்ரமன், பார்த்திபன் என பல முக்கியமான இயக்குனர்களில் படங்களில் நடித்தார். இருந்தாலும் வெற்றி என்பது விக்ரமுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது.

இதையும் படியுங்கள்... Akshay Kumar: பான் இந்தியா படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்!

46
Vikram salary

இப்படி படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் ராசியில்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்டார் விக்ரம். இருப்பினும் சினிமா மீதுள்ள காதலால் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த விக்ரம் ஹீரோ வாய்ப்புகள் கிடைக்காத சமயத்தில் டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்தார். அந்த நிலையில் தான் இயக்குனர் பாலாவின் அறிமுகம் விக்ரமுக்கு கிடைத்தது. விக்னேஷை வைத்து தான் தொடங்கி நின்று போன அகிலன் படத்தை சேதுவாக மாற்றி அதில் விக்ரமை நடிக்க வைத்தார் பாலா.

56
Vikram Movies

சீயான் விக்ரமுக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சேது படத்தின் வெற்றிக்கு பின்னர் தில், தூள் சாமி, ஜெமினி என அடுத்தடுத்து ஹிட் கொடுத்ததால் முன்னணி நடிகராக உருவெடுத்தார் விக்ரம். இப்படி சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் விக்ரம் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம்.

66
Vikram Net Worth

அதன்படி தமிழ் சினிமாவில் எந்த கேரக்டராக இருந்தாலும் தன்னுடைய நூறு சதவீத உழைப்பை கொட்டும் விக்ரம் தற்போது ஒரு படத்துக்கு ரூ.30 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார். அவருக்கு சென்னையில் ஆடம்பர பங்களா ஒன்றும் உள்ளது. அதன் மதிப்பும் பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர ஏராளமான சொகுசு கார்களையும் வாங்கி குவித்து வைத்திருக்கும் நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு சுமார் ரூ.150 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அவர் நடிப்பில் தற்போது தங்கலான் திரைப்படம் உருவாகி உள்ளது. அப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதையும் படியுங்கள்... Mr Manaivi : மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகிய ஷபானா... அவருக்கு பதில் நடிக்கப்போவது யார் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories