பிக்பாஸ் டூ சினிமா.. ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகும் விஷ்ணு & மாயா! அடுத்தடுத்து வந்த அப்டேட்; ஆடிப்போன ரசிகர்கள்

Published : Mar 17, 2024, 09:28 AM ISTUpdated : Mar 17, 2024, 09:30 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட விஷ்ணு விஜய் மற்றும் மாயா ஆகியோர் தற்போது சினிமாவில் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கின்றனர்.

PREV
14
பிக்பாஸ் டூ சினிமா.. ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகும் விஷ்ணு & மாயா! அடுத்தடுத்து வந்த அப்டேட்; ஆடிப்போன ரசிகர்கள்
Bigg Boss Tamil season 7 contestants

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் இருந்த இந்நிகழ்ச்சியில் கடும் போட்டிக்கு நடுவே அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலையும், ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அதில் பங்கேற்ற பிரபலங்களுக்கு பட வாய்ப்புகள் குவிவது வழக்கம். அந்த வகையில் பிக்பாஸ் 7 போட்டியாளர்களுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

24
Maya, vishnu vijay

அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளர் பூர்ணிமா, செவப்பி என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்துள்ளன. அடுத்தபடியாக வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமாரும் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் டீன்ஸ் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதோடு விரைவில் ஹீரோயினாகவும் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளாராம் ஜோவிகா.

இதையும் படியுங்கள்... 25 வருட கனவு நனவானது... மிஷ்கினின் குழந்தையை தத்தெடுத்திருக்கிறேன் - நடிகர் விஷாலுக்கு குவியும் வாழ்த்து

34
fighter raja

மறுபுறம் நிக்சன் சுயாதீன இசை ஆல்பங்கள் தயாரிக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் உருவாக்கிய நடராஜனின் நாட்டியம் என்கிற இசை ஆல்பம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதுதவிர மாயாவும் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். அவர் தெலுங்கில் ஹீரோயினாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். ஃபைட்டர் ராஜா என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் படப்பிடிப்பும் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.

44
Vishnu Vijay

மாயா தான் ஹீரோயினாக அறிமுகமாக உள்ள படத்தின் அப்டேட்டை வெளியிட்டதை தொடர்ந்து அவருக்கு போட்டியாக நடிகர் விஷ்ணு விஜய்யும் தான் ஹீரோவாக அறிமுகமாக உள்ள படத்தின் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி தெலுங்கில் ஹிட் அடித்த படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஜய் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம். அப்படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறதாம். விரைவில் அது என்ன படம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக விஷ்ணு விஜய் கூறி இருக்கிறார். இப்படி பிக்பாஸ் போட்டியாளர்கள் அடுத்தடுத்து தங்கள் பட அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் ஆடிப்போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... விவாகரத்தான 40 வயது நடிகரை இரண்டாம் திருமணம் செய்த ஜிவி பிரகாஷ் பட ஹீரோயின்! வெளியான வெட்டிங் போட்டோஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories