Vichithra Salary: பிக்பாஸில் 50 வயதிலும் செம்ம டஃப் கொடுக்கும் விசித்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published : Dec 20, 2023, 06:08 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக இருக்கும் விசித்ரா நாள் ஒன்றுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
16
Vichithra Salary: பிக்பாஸில் 50 வயதிலும் செம்ம டஃப் கொடுக்கும் விசித்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் 90-களில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட விசித்ரா, 1991 ஆம் ஆண்டு வெளியான 'பொற்கொடி' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, 'அவள் ஒரு வசந்தம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது மட்டும் இன்றி பல படங்கள் கிடைக்க வழிவகுத்தது.
 

26

இதை தொடர்ந்து சின்னத்தாயே, தலைவாசல், தேவர்மகன், ஏழாம் இடம், அமராவதி, சபாஷ் பாபு, வீரா, போன்ற பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானார்.

Jyothika: வாலி படத்தில் சிம்ரன் ஹீரோயினானது எப்படி? 24 வருடம் பொத்தி வச்ச ரகசியத்தை போட்டுடைத்த ஜோதிகா!
 

36

தமிழில் சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விசித்ரா, சில சீரியல்களிலும் நடித்துள்ளார். திரை உலகில் அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்று நடித்துக் கொண்டிருக்கும் போதே, ஷாஜி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு தற்போது மூன்று மகன்கள் உள்ளனர்.
 

46

மீண்டும் திரையுலகில் ரீஎன்ட்ரி கொடுக்க முடிவு செய்த விசித்ரா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பைனல் வரை வந்தும் இவரால் டைட்டில் வெல்ல முடியவில்லை. பின்னர் பிக்பாஸ் சீசன் செவன் நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

Thalapathy68 Comedian: இவர் தான் தளபதி 68 பட காமெடியனா? 16 வருடத்திற்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணைந்த நடிகர்
 

56

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் 40, 50, வயதை எட்டிய பிரபலங்கள் மிகவும் போர் கன்டென்ட் கொடுப்பதால், மக்கள் குறைவான வாக்குகளை கொடுத்து வெளியே அனுப்புவது வழக்கமான ஒன்று. ஆனால் கிட்டத்தட்ட 80 நாட்களாகியும் சுவாரஸ்யமான கன்டென்ட் கொடுத்தும் மிகவும் பாசிட்டிவ் ஆகவும் விளையாடி, பலரது மனதை வென்றுள்ளார் விசித்ரா. இவருக்கென தற்போது தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அதேபோல், பிக்பாஸ் பைனலிஸ்ட் லிஸ்டில் கண்டிப்பாக விசித்ரா இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

66

விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும், ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள விசித்ரா, ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி விசித்ராவுக்கு,  ஒரு நாளைக்கு 40,000 சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக சம்பளம் பெரும் போட்டியாளராகவும் இவர் தான் உள்ளார் என கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Read more Photos on
click me!

Recommended Stories