MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Jyothika: வாலி படத்தில் சிம்ரன் ஹீரோயினானது எப்படி? 24 வருடம் பொத்தி வச்ச ரகசியத்தை போட்டுடைத்த ஜோதிகா!

Jyothika: வாலி படத்தில் சிம்ரன் ஹீரோயினானது எப்படி? 24 வருடம் பொத்தி வச்ச ரகசியத்தை போட்டுடைத்த ஜோதிகா!

நடிகை ஜோதிகா, தான் அறிமுகமான 'வாலி' படம் குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

2 Min read
manimegalai a
Published : Dec 20 2023, 05:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Jyothika Surya

Jyothika Surya

90'களில், தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில், தல அஜித் இரட்டை வேடத்தில் நடித்த 'வாலி' படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

26
Jyothika Surya

Jyothika Surya

குறிப்பாக தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான விஜய், சூர்யா, அர்ஜுன், கமல், போன்ற பலரும் ஜோடி போட்டார். தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள ஜோதிகா... நடிகர் சூர்யாவுடன் அடுத்தடுத்து பல படங்களில் நடித்த போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

Thalapathy68 Comedian: இவர் தான் தளபதி 68 பட காமெடியனா? 16 வருடத்திற்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணைந்த நடிகர்

36
Jyothika Surya

Jyothika Surya

திருமணத்திற்கு பின்னர், திரையுலகில் இருந்து முழுமையாக விலகிய ஜோதிகா... பின்னர் தன்னுடைய குழந்தைகள் நன்கு வளர்ந்த பின்னர், சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

46
Jyothika Surya

Jyothika Surya

கோலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா - ஜோதிகா இருவரும், அண்மையில் மும்பையில் குடியேறினர். இந்நிலையில் சமீபத்தில் ஜோதிகா பிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக மாமனார் நடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தாரா? சூர்யாவுடன் மும்பையில் செட்டில் ஆனதன் காரணம் என்ன? என பல ரகசியங்களுக்கு இந்த பேட்டி மூலம் விடை கிடைத்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

56
Jyothika Surya

Jyothika Surya

இந்த பேட்டியில் கோபிநாத் வாலி படத்தில் ஏன் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானீர்கள் என கேள்வி எழுப்பிய நிலையில், இதற்கு பதிலளித்த ஜோதிகா ஆரம்பத்தில் எஸ் ஜே சூர்யா சிம்ரன் நடித்த ஹீரோயின் கதாபாத்திரத்தில் தான் தன்னை நடிக்க கமிட் செய்ததாகவும், பின்னர் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க நான் கால்ஷீட் கொடுத்தேன். ஒரே நேரத்தில் இரண்டு படப்பிடிப்புகளின் கால்ஷீட் கிளாஷ் ஆனதால், வாலி படத்தில் இருந்து விலகினேன். அதன் பின்னரே சிம்ரன் இப்படத்தில் கமிட் ஆனதாக கூறியுள்ளார்.

66

பின்னர் எஸ் ஜே சூர்யா இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் உள்ளது. அதில் நடிக்க முடியுமா என கேட்டபோது... என்னால் அந்த வாய்ப்பை மறுக்க முடியவில்லை. எனவே தான் அந்த கேமியோ ரோலில் நடித்தேன் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் வாலி படம் குறித்த ரகசியம் வெளியாகியுள்ளது குறிபிடித்தக்கது.

Hema Chaudhary: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கல்லூரி தோழியும்.. நடிகையுமான ஹேமா சவுத்ரி மருத்துவமனையில் அனுமதி

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிம்ரன்
அஜித் குமார்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved