தளபதி, லியோ படத்தில் நடித்து முடித்த கையோடு... தன்னுடைய 68வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்தில், நடிகர் பிரசாத், பிரபுதேவா, சினேகா, ஜெயராம், மைக் மோகன், லைலா, உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரும், அவருடைய சகோதரருமான யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளார்.