நடிப்புக்கு டாட்டா காட்டிட்டு.. படிப்புக்கேத்த டாக்டர் வேலைக்கு போய்ட்டாரா அதிதி ஷங்கர்! வைரலாகும் போட்டோ!
நடிகை அதிதி ஷங்கர் திடீர் எ, மருத்துவர் அவதாரம் எடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தமிழ் சினிமாவில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் என்கிற அடையாளத்துடன் திடீர் என சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக முத்தையா இயக்கத்தில், இவர் நடித்திருந்த 'விருமன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பையும், டான்ஸையும் வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் பச்சக் என ஒட்டி கொண்டார் அதிதி.
அதே போல் பெரிய இடத்து பெண் என அலட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் கேஷுவலாக பழகும் குணம், எப்போதும் ஏதாவது மொக்கை ஜோக் அடித்து கொண்டு, துறுதுறுவென பேசி கொண்டே இருப்பது இவரின் மிகப்பெரிய பிளஸ் என கூறலாம். விருமன் படத்தில் நடித்து முடித்த கையேடு, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, மாவீரன் படத்தில் நடித்த இவர், தற்போது தமிழ் சினிமாவில் படு பிஸியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இயக்குனர் விஷ்ணு வர்த்த இயக்கத்தில் ஒரு படத்திலும், இயக்குனர் ராம் குமார் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ள அதிதி, திடீர் என டாக்டர் கெட்டப்புக்கு மாறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். கழுத்தில் டேக் மற்றும் டாக்டர்கள் அணியும் உடையில் மாஸ்க், கிளவுஸ் போன்றவை அணிந்து, டாக்டர் A என்கிற கேப்ஷனுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
MBBS படித்து முடித்த இவர், தன்னுடைய ஆசைக்காக நடிக்க வந்த நிலையில்... தற்போது மீண்டும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை செய்ய செய்ய தீர்மானித்து விட்டாரா? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சிலர் நீங்க டாக்டரா நடிக்கிறீங்களா என்றும் கேட்டு வருகிறார்கள். அதிதியின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D