Ayalaan OTT Release: ஆர் யூ ரெடி.. சிவகார்த்திகேயனின் 'அயலான்' OTT ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு!

Published : Feb 06, 2024, 08:15 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், பொங்கல் ரிலீசாக வெளியான அயலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
15
Ayalaan OTT Release: ஆர் யூ ரெடி.. சிவகார்த்திகேயனின் 'அயலான்' OTT ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு!
ayalaan

தொடர்ந்து வித்யாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் சிவகார்த்திகேயன், ஏலியனை மையப்படுத்திய சயின்ஸ் பிக்சன் கதையில் நடித்திருந்த திரைப்படம் அயலான்.
 

25
ayalaan

2017 ஆம் ஆண்டு, இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில்... ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகிக்கொண்டே சென்றது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் பணிகள் காரணமாகவும் தாமதமானதாக பட குழுவினர் தெரிவித்திருந்தனர்.

அனைவர் மும்பும் வெள்ளை புடவையால் அவமானப்பட்ட அபிராமி! தீபாவுக்கு கொடுத்த தண்டை! கார்த்திக் செய்யப்போவது என்ன?
 

35

இந்த படத்தின் நிதி பிரச்சனையை தீர்ப்பதற்காக, நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்தையே விட்டுக் கொடுத்த நிலையில், இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில், முதலுக்கு மோசம் இல்லாத வசூலை குவித்ததாக கூறப்படுகிறது.
 

45
Ayalaan movie

இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகர்கள் யோகி பாபு மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 4500க்கும் மேற்பட்ட விசுவல் எபெக்ட் காட்சிகள் இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் எடுக்கப்பட்ட சயின்ஸ் பிக்சன் திரைப்படங்களில் மிகச்சிறந்த திரைப்படமாக திகழ்ந்து வருகிறது அயலான் என்றால் அது மிகையல்ல.

Singapennae: இது தான் விஷயமா? சிங்கப்பெண்ணே சீரியல் குழுவின் கொண்டாட்டம்.! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

55

இந்நிலையில் 'அயலான்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி பிப்ரவரி ஒன்பதாம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இப்படம் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளதாக பட குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த படத்தை 'நேற்று இன்று நாளை' படத்தை இயக்கிய இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories