Anushka shetty : சினிமாவில் மவுசு இல்லை... அரசியலில் குதிக்கும் அனுஷ்கா? பிரபல நடிகரின் கட்சியில் இணைய திட்டம்

First Published Mar 29, 2024, 10:46 AM IST

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா ஷெட்டி, அரசியலில் குதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Anushka

சினிமா நடிகர், நடிகைகள் அரசியலில் குதிப்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. அந்த வரிசையில் நடிகர் விஜய் அண்மையில் தனது அரசியல் எண்ட்ரியை அறிவித்தார். அவர் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அக்கட்சி வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. விஜய்யின் அரசியல் வருகையால் தமிழக தேர்தல் களம் சற்று சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Anushka Shetty

மறுபுறம் ஆந்திராவில் நடிகை அனுஷ்கா ஷெட்டி அரசியலில் குதிக்க உள்ள தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்களின் ஐந்து ஆண்டு ஆட்சி முடிவடைய உள்ள நிலையில், வருகிற மே மாதம் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி ஆகிய மூன்று கட்சிகள் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

இதையும் படியுங்கள்... Gouri G Kishan : 96 பட நடிகரை ரகசிய திருமணம் செய்துகொண்டாரா குட்டி திரிஷா? வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

Anushka Shetty political entry

இதில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றிபெற்றதோடு, அம்மாநிலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தார். இதனால் இம்முறையும் அவருக்கு நகரி தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், அந்த தொகுதியில் ரோஜாவுக்கு போட்டியாக நடிகை அனுஷ்காவை களமிறக்க பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி முடிவெடுத்து உள்ளதாம்.

Anushka Shetty enters politics

நடிகை அனுஷ்காவுக்கு தற்போது சினிமாவில் மவுசு குறைந்துவிட்டதால் அவர் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளாராம். ஜன சேனா கட்சி சார்பில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அனுஷ்காவை நிற்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். நகரி தொகுதி தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதி என்பதால், அங்கு தமிழர்களுக்கு பரிட்சயமான நடிகையான அனுஷ்காவை களம் இறக்கினார் பொறுத்தமாக இருக்கும் என பவன் கல்யாண் எண்ணி உள்ளாராம். இதனால் ஆந்திராவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதையும் படியுங்கள்... Aadujeevitham : கேரளாவில் விஜய் பட வசூலை கிட்ட கூட நெருங்க முடியாத ஆடுஜீவிதம்! முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

click me!