Anirudh Andrea : அந்த வயசுலயே ஆண்ட்ரியா உடன் நெருக்கம்... முதல் காதல் தோல்வி குறித்து மனம்திறந்த அனிருத்

Published : Apr 07, 2024, 09:10 AM ISTUpdated : Apr 07, 2024, 09:13 AM IST

இசையமைப்பாளர் அனிருத், நடிகை ஆண்ட்ரியா உடனான தன்னுடைய காதல் தோல்வியில் முடிந்தது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

PREV
14
Anirudh Andrea : அந்த வயசுலயே ஆண்ட்ரியா உடன் நெருக்கம்... முதல் காதல் தோல்வி குறித்து மனம்திறந்த அனிருத்
anirudh, andrea

கோலிவுட்டின் மியூசிக்கல் சென்சேஷனாக திகழ்ந்து வருபவர் அனிருத். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப்பயிற்சி பெற்ற அனிருத்தை திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் தனுஷ் தான். அவர் நடித்த மூணு படம் மூலம் அனிருத்தை அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே தன்னுடைய திறமையை நிரூபித்த அனிருத், அப்படத்திற்காக இசையமைத்த முதல் பாடலே உலகளவில் ரீச் ஆனது. மூணு படம் தோல்வியை சந்தித்தாலும் அப்படத்தை ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் அனிருத்தின் இசை தான்.

24
Anirudh Ravichander

இதையடுத்து விஜய், அஜித், ரஜினி என கோலிவுட்டில் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் பணியாற்றி முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்த அனிருத், தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் செம்ம பிசியாக பணியாற்றி வருகிறார். இவர் கைவசம் கமலின் இந்தியன் 2, அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் வேட்டையன் மற்றும் தலைவர் 171, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் தேவரா, அட்லீ - அல்லு அர்ஜுன் இணையும் படம் என அனிருத்தின் லைன் அப் நீண்டுகொண்டே செல்கிறது.

இதையும் படியுங்கள்... Vignesh Shivan Love: விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் காதலுக்கு ‘லவ் குரு’வாக இருந்தது இந்த மாஸ் நடிகர் தானாம்..!

34
Anirudh, Andrea Love

தற்போது ராக்ஸ்டாராக திகழ்ந்து வரும் அனிருத், ஒரு காலகட்டத்தில் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அதில் ஒன்று தான் நடிகை ஆண்ட்ரியா உடனான காதல் சர்ச்சை. இருவரும் உருகி உருகி காதலித்து வந்த நிலையில், சுச்சி லீக்ஸ் மூலம், அவர்கள் இருவரும் நெருக்கமாக லிப்லாக் கிஸ் அடித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் லீக் ஆகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின்னர் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர்.

44
Anirudh Love break up

தங்களின் காதல் தோல்வியில் முடிந்தது ஏன் என்பது பற்றி அனிருத்தே நேர்காணல் ஒன்றில் கூறி இருக்கிறார். அதில் நீங்கள் காதலித்த நடிகை யார், அவரின் பெயரையும் காதல் தோல்விக்கான காரணத்தையும் ஏன் வெளியிடவில்லை என்று ஓப்பனாக கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அனிருத், அந்த காதலி பெயர் ஆண்ட்ரியா. 19 வயதில் நான் அவரை காதலித்தேன். என்னுடைய முதல் காதலும் அவர்தான். அப்போது ஆண்ட்ரியாவுக்கு 25 வயது. எங்கள் காதல் தோல்விக்கு முக்கியமான காரணம் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் தான். ஆண்ட்ரியா என்னைவிட 6 வயது மூத்தவராக இருந்ததால் இருவருக்கும் செட் ஆகவில்லை. பிரிந்துவிட்டோம்” என கூறி இருக்கிறார். 

இதையும் படியுங்கள்... Mollywood : மோலிவுட் உலகில் கால்பதிக்கும் மாஸ் கோலிவுட் நடிகர்.. கைகோர்க்கும் ஃபஹத் - மாஸ் அப்டேட் இதோ!

Read more Photos on
click me!

Recommended Stories